சத்தான பீட்ரூட் ராகி தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பீட்ரூட் ராகி தோசை செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – 1 கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு – கால் கப்,
துருவிய பீட்ரூட் – கால் கப்,
பச்சை மிளகாய் – 3,
எண்ணெய் – தாளிக்க + தோசை சுடுவதற்கு தேவையான அளவு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு, ராகி மாவு சேர்த்து கலந்து, 10 மணி நேரம் வைக்கவும்.
* பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதில் பச்சை மிளகாய், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.
* வதக்கிய பீட்ரூட்டை மாவில் சேர்த்து கலக்கி, மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு, வெந்ததும் திருப்பி விட்டு மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சத்து மிகுந்த தோசை இது.