28.1 C
Chennai
Friday, Mar 27, 2026
44072830 chennai 02
Other News

திருமாவளவன் பரபரப்பு பேச்சு: இந்து மதம் என்ற ஒன்றே இல்லை

2025ம் ஆண்டிற்கான விசிக விருது வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசியலை நாம் கூர்மைப்படுத்துகிறோம்: சனாதன சக்திகள் தமிழ்நாடு மண்ணை நஞ்சாக்க விடமாட்டோம். சனாதன சக்திகளா?, விடுதலை சிறுத்தைகளா? என்பதுதான் தமிழ்நாட்டு பாலிடிக்ஸ். தமிழ்நாட்டு அரசியலை மதவாத அரசியலை நோக்கி மடைமாற்றம் செய்ய பலர் முயற்சிக்கின்றனர்.

மதச்சார்பின்மைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., பாஜக செயல்படுவதால் அது கூர்மைப்படுகிறது. மதச்சார்பின்மை கூர்மைப்படக் காரணமான ஆர்.எஸ்.எஸ்., பாஜகவுக்கு நன்றி. தேர்தல் கட்சி என்ற வகையில் பாஜகவை எதிர்க்கவில்லை; அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம்.

 

நாட்டில் அமையும் அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும்; பாஜகவோ அரசமைப்பை எறிய நினைக்கிறது. நாம் கொடியேற்ற, பேனர் கட்ட, பொதுக்கூட்டங்களை நடத்த போராட வேண்டியுள்ளது எங்கள் இயக்கம் சட்டமன்ற, நாடாளுமன்ற சீட்டு பேரம் பேசுவதற்கு அல்ல; ஒருநாள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றுகூட நான் அறிவித்துவிடுவேன். இருக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை; பிளாஸ்டிக் சேர், தரையில் கூட அமருவேன்.

இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்து மதம் வந்தது; பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது; இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது; அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு.

திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா?. புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை. என்னை சங்கராச்சாரியராக்க வேண்டாம்; சகோதரனான ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கேப்டன் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் விஷால் திட்டவட்டம்

nathan

ஜெயிலர் சாதனையை முறியடித்த லியோ.. வசூலில் நம்பர் 1 இடம்

nathan

லாட்ஜிக்கு வரவழைத்து 10-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்

nathan

மேலாடை நழுவுவது கூட தெரியாமல்.. ஆட்டம் போடும் சமந்தா..!

nathan

மகளுக்கு திருமணம் செய்யும் நேரத்தில் இரண்டாவது குழந்தையா?

nathan

பட வாய்ப்பு தரேன்-ன்னு என்ன நாசம் பண்ணிட்டார்.!

nathan

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ ரூ.50 கோடி வசூல்!

nathan

எகிப்து பெண்களை ஓரம் கட்டிய அதுல்யா ரவி..!

nathan

திரும்பிப் பார்க்க வைத்த பாட்டி!!71 வயதில் இப்படி ஒரு சாதனை?

nathan