31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

இந்தியாவின் 2 இராணுவ விமானங்களை அழித்த பாகிஸ்தான்

இந்தியாவின் இரண்டு இராணுவ விமானங்களை, சீனத் தயாரிப்பு போர் விமானம் ஒன்றைக் கொண்டு பாகிஸ்தான் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி இருந்தது.

இதன்போது இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதில் ஃப்ரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் போர் விமானம் ஒன்றும் அடங்கும்.

இந்த விமானங்கள் இரண்டையும் சீனாவின் தயாரிப்பில் பாகிஸ்தான் கொள்வனவு செய்த போர் விமானம் ஒன்றைக் கொண்டே பாகிஸ்தான் வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இது தொடர்பாக இந்தியாவின் விமானப்படை அதிகாரிகள் யாரும் பதில் வழங்கவில்லை என்றும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் நேற்றிரவு வான் தாக்குதலை நடத்த முற்பட்டதாகவும், அந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து இந்தியாவும் பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

Related posts

சுக்கிரன் பெயர்ச்சி.. பணம், புகழ், அதிர்ஷ்டம்,

nathan

மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை சோபனா..!

nathan

காதலித்து விட்டு வேறொருவருடன் திருமணம்; ஆசிட் வீசிய நபர்

nathan

சிறகடிக்க ஆசை மீனாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

அக்கா மகள் திருமணம்.. குடும்பத்துடன் டான்ஸ் ஆடிய அருண் விஜய்!

nathan

கே ஜி எஃப் 2, பொன்னியின் செல்வன் பட சாதனையை உடைத்து முன்னேறிய துணிவு.!

nathan

சிறந்த விவசாயி’ விருது பெற்ற நடிகர் ஜெயராம்!

nathan

விஜய்க்கு ஜோடியான 26 வயது நடிகை

nathan

மகளின் முதல் பொங்கலை கொண்டாடிய நடிகை நட்சத்திரா

nathan