28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
gettyimages 510521514
Other News

இந்தியாவின் 2 இராணுவ விமானங்களை அழித்த பாகிஸ்தான்

இந்தியாவின் இரண்டு இராணுவ விமானங்களை, சீனத் தயாரிப்பு போர் விமானம் ஒன்றைக் கொண்டு பாகிஸ்தான் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி இருந்தது.

இதன்போது இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதில் ஃப்ரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் போர் விமானம் ஒன்றும் அடங்கும்.

இந்த விமானங்கள் இரண்டையும் சீனாவின் தயாரிப்பில் பாகிஸ்தான் கொள்வனவு செய்த போர் விமானம் ஒன்றைக் கொண்டே பாகிஸ்தான் வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இது தொடர்பாக இந்தியாவின் விமானப்படை அதிகாரிகள் யாரும் பதில் வழங்கவில்லை என்றும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் நேற்றிரவு வான் தாக்குதலை நடத்த முற்பட்டதாகவும், அந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து இந்தியாவும் பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

Related posts

நியூமராலஜி எண் கணிதம்

nathan

சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ்

nathan

இந்த ராசி ஆண்களிடம் ரொம்ப உஷாரா இருங்க!ரொம்பவே கொடுமைப்படுத்துவாங்களாம்

nathan

அஜித்தின் செயலால் அதிர்ச்சியான பாவனா

nathan

இந்த உணவுகளை தெரியாமகூட தொட்றாதீங்க…! சிறுநீரகக் கற்கள் உருவாகுவதை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் தடுக்கலாம்.

nathan

விவாகரத்து சர்ச்சைகளுக்கு முற்றிப்புள்ளி – கணவருடன் சேர்ந்து புது தொழில்

nathan

தீவிரமாக தேடப்படும் கேரளா நபர்: அதிரவைக்கும் பின்னணி

nathan

என் குடும்பத்தை பத்தி பேசாத… அலறவிட்ட ஜோவிகா..

nathan

அம்பானி, அதானியை பின்னுக்கு தள்ளி இந்திய பெண்மணி: யார் இந்த சாவித்ரி ஜிண்டால்?

nathan