29.7 C
Chennai
Wednesday, Jul 16, 2025
201605211106003784 How to make delicious gobi 65 SECVPF
அசைவ வகைகள்

சுவையான கோபி 65 செய்வது எப்படி

சுவையான கோபி 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை மாலை நேரம் சுக்கு காபியுடன் சுவைக்க அருமையாக இருக்கும்.

சுவையான கோபி 65 செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பெரிய காலிஃப்ளவர் – 1
சோளமாவு – 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக வெட்டி கொதிக்கும் வெந்நீரில் சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் போட்டு எடுக்கவும். இதனால் அதில் கண்ணிற்கு தெரியாத பூச்சிகள் இருந்தாலும் இறந்துவிடும்.

* ஒரு அகலமான பாத்திரத்தில் காலிஃப்ளவரை கொட்டி அதன் மீது சோளமாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், கரம் மசாலாதூள், சமையல் சோடா, உப்பு, இஞ்சி பூண்டு விழுது மைதா மாவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் தூவி கலக்கவும். அதிக உலர்வாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்து பின்னர் அரை மணி நேரம் ஊறவிடவும்.

* வாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும் அதில் ஊறவைத்த காலிஃப்ளவரை போட்டு பொரித்தெடுக்கவும்.

* மொறு மொறுப்பான கோபி 65 தயார். கொத்துமல்லி தூவி பரிமாறவும்.201605211106003784 How to make delicious gobi 65 SECVPF

Related posts

ஆனியன் சிக்கன் வறுவல்

nathan

கோழி ரசம்

nathan

சுவையான முட்டை சுக்கா

nathan

சுவையான கொங்குநாடு கோழி குழம்பு

nathan

நண்டு தொக்கு மசாலா

nathan

பாத்தோடு கறி

nathan

முட்டை மிளகு மசாலா : செய்முறைகளுடன்…!

nathan

மட்டன் மிளகு கறி

nathan

பட்டர் சிக்கன் மசாலா

nathan