25.1 C
Chennai
Thursday, Dec 4, 2025
paneer fingers 19 1463656462
சிற்றுண்டி வகைகள்

மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

மாலை வேளையில் மேகமூட்டமாக இருக்கும் போது மொறுமொறுவென்றும், சூடாகவும் ஏதேனும் சாப்பிடத் தோன்றும். அப்போது உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதனைக் கொண்டு அற்புதமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து சுவையுங்கள். அது வேறொன்றும் இல்லை பன்னீர் ஃபிங்கர்ஸ்.

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த பன்னீர் ஃபிங்கர்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 1 பாக்கெட் (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்) மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் மைதா – 2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் பிரட் தூள் – 1 கப் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின் மற்றொரு பௌலில் சோள மாவு, மைதா, உப்பு, மிளகுத் தூள், மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளை மைதா கலவையில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ் ரெடி!!!

paneer fingers 19 1463656462

Related posts

தினை இனிப்புப் பொங்கல்

nathan

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

nathan

வெங்காய பஜ்ஜி

nathan

வெந்தய மாங்காய்

nathan

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப்

nathan

சம்பா ரவை பொங்கல் செய்ய…!

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் வடை

nathan

உப்புமா

nathan

சாக்லெட் சுவிஸ் ரோல்

nathan