28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
0LKBuqm
கேக் செய்முறை

புளிக்கூழ் கேக்

என்னென்ன தேவை?

புளித்தண்ணீர் (கெட்டியான புளிக்கரைசல்) – 2 கப்,
உப்பு, நல்லெண்ணெய் – தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
அரிசி மாவு – 1 கப்,
கறிவேப்பிலை – சிறிது,
பொடியாக அரிந்த இஞ்சி – 1 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3 (நீளவாக்கில் கீறியது),
நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை – 2 டேபிஸ்ஸ்பூன்.

தாளிக்க…

கடுகு, கடலைப் பருப்பு, உடைத்த உளுந்து – தலா 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைச் சேர்த்து தாளிக்கவும். அத்துடன் கறிவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், வேர்க்கடலை சேர்த்துக் கிளறவும். புளித்தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரிசி மாவைக் கரைக்கவும். அதையும் கலவையில் ஊற்றிக் கிளறவும். கட்டிதட்டாமல், அடிப்பிடிக்காமல் குறைந்த தணலில் வைத்துக் கிளறவும். கடைசியாக நல்லெண்ணெய் ஊற்றவும். புளிக்கரைசல் கெட்டியாக ஆனதும் புளிக்கூழ் ரெடி. இதை அப்படியே கூழ் மாதிரி சாப்பிடலாம் அல்லது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறினதும் கேக் மாதிரி வெட்டியும் சாப்பிடலாம்.
0LKBuqm

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் மினி பான் கேக்

nathan

பனானா கேக்

nathan

காபி  கேக்

nathan

ரஸமலாய் கஸாட்டா

nathan

பேரீச்சப்பழ கேக்/ Date cake/ டேட்ஸ் கேக்

nathan

மைதா  ஃப்ரூட்  கேக்

nathan

மாம்பழ கேக் புட்டிங்

nathan

சைவக் கேக் (Vegetarian Cake)

nathan

பலாப்பழ கேக்

nathan