28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
151
ஆரோக்கிய உணவு

டயட் அடை : ஈஸி 2 குக் ! ஹெல்த்தி டைம்!!

ஹெல்த்தி டைம்
ஈஸி 2 குக்

15

சில நிமிடங்களில் உணவு தயாரிக்க வேண்டும் என்பது அனைவருடைய விருப்பம். அதுவும் ஹெல்த்தியாக, டேஸ்ட்டியாக இருந்தால், அது நம் அன்றாட மெனுவின் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிடும். கடைகளில் ஜங்க்ஃபுட் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆனால், ஹெல்த்தி ரெசிப்பிகளான ராகி ஃபுட்ஸ், பெசரட், சிறுதானிய பிரியாணி ஆகியவை அதிக விலையில் விற்கப்படுகின்றன. ஹெல்த்தி ரெசிப்பிகளை ஏன் வீட்டிலேயே செய்யக் கூடாது? இனி, ஒவ்வோர் இதழிலும் உங்களின் ஆரோக்கியம் மெருகேற ஹெல்த்தி ரெசிப்பிகள் அணிவகுக்க இருக்கின்றன.
பலருக்கும் காலை டிபன் என்றால், அது இட்லி, தோசை, பொங்கல், உப்புமா என மாவுச்சத்தான உணவுதான். சமச்சீர் சத்துக்கு எங்கு செல்வது? காலை உணவில் சமச்சீர் சத்துக்கள் இருந்தால், அன்றைய நாளின் தொடக்கம் உற்சாகமாக இருக்கும். இதோ அதற்கான ரெசிப்பி!
டயட் அடை
தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா 150 கிராம், துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து – 150 கிராம், காய்ந்த மிளகாய் – 10 (காரத்துக்கு ஏற்ப), உப்பு – தேவைக்கு ஏற்ப, பொடியாக நறுக்கிய சௌசௌ, வெங்காயம் – தலா 1 கப், தேங்காய் – அரை கப்.
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை: அரிசி, பருப்பை இரண்டு மணி நேரத்துக்கு ஊறவைத்து, கொரகொரப்பான பக்குவத்தில் அரைக்க வேண்டும். அதில் தாளித்த பொருட்கள், நறுக்கிய காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்துக் கலக்க வேண்டும். அடுப்பில், தோசைக்கல்லை வைத்து, சின்னச்சின்ன அடைகளாகச் சுட வேண்டும். சௌசௌக்குப் பதிலாக சுரைக்காய், முருங்கைக் கீரை, வாழைப்பூ போன்றவற்றையும் சேர்த்து செய்யலாம். புதிய சுவை கிடைக்கும். அவியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

16

பலன்கள்
புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின், தாதுஉப்புக்கள், நல்ல கொழுப்பு உள்ளிட்டவை சமச்சீராகக் கிடைக்கின்றன.
பள்ளி செல்லும் மாணவர்களுக்கான ஊட்டச்சத்து மிகுந்த சிற்றுண்டி. குழந்தைகளுக்கு அவசியம் பரிந்துரைக்கப்படும் உணவு இது. மதிய உணவு வேளை வரை பசிக்காது.
பெண்கள், கர்ப்பிணிகள் வாரம் இருமுறை சாப்பிட்டுவர, தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைவாக உள்ளன.  எலும்புகள் உறுதியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Related posts

பலமுறை சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா நீங்கள் போதுமான அளவு காய்கறிகளை சாப்பிடுவதில்லை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

nathan

தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்க

nathan

கொழுப்பைக் குறைக்கும் கொண்டைக்கடலை

nathan

அன்னாசிப்பழம் மூலம் கிடைக்கும் நன்மைகள் – Health benefits of pineapple

nathan

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்! இதை படிங்க…

nathan

கோடைகாலத்தில் உடல் நலனை பாதுகாக்க செய்ய வேண்டியவை

nathan

இறால் ஊறுகாய் செய் முறை?

nathan

உங்களுக்கு தெரியுமா மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன!!!

nathan