29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
soya chunks gravy 09 1462796522
சைவம்

மீல் மேக்கர் கிரேவி

இரவில் உங்கள் வீட்டில் எப்போதும் சப்பாத்தியா? அதற்கு சைடு டிஷ் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் இன்று மீல் மேக்கர் கொண்டு கிரேவி செய்து சுவையுங்கள். இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த மீல் மேக்கர் கிரேவியை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் – 1/2 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் பெரிய வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு பால் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் மிளகு – 1/2 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் வெங்காயம் – 1 (சிறியது) தக்காளி – 2 (சிறியது)

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் தண்ணீர் மற்றும் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கும் வரை சூடேற்ற வேண்டும். பின் அதில் மீல் மேக்கரைப் போட்டு சில நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும். பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, 1/2 கப் – 3/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி ரெடி!!!

soya chunks gravy 09 1462796522

Related posts

விதம் விதமான வெஜிட்டேரியன் கிரேவி

nathan

சூப்பரான மீல் மேக்கர் பிரியாணி : செய்முறைகளுடன்…!

nathan

சுவையான கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan

வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை

nathan

கறிவேப்பிலை குழம்பு

nathan

கடாய் பனீர் – kadai paneer

nathan

வெண்டை மொச்சை மண்டி

nathan

இதயத்துக்கு இதமான கொத்தவரங்காய் சப்ஜி

nathan

பனீர் கச்சோரி

nathan