26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
young woman helping to boyfriend parents
Other News

உயிரோடில்லாத காதலன் வீட்டில் மருமகளாக வாழும் இளம்பெண்!

மருமகள் தங்கள் வீட்டில் வாழ்வதால் மகனின் நினைவோடு நாங்கள் எங்கள் மருமகளை பார்க்கிறோம் என கண்ணீர் மல்க கோவிந்தராஜ் – பத்மாவதி கூறினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள பிரதாபராமபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் – பத்மாவதி தம்பதியினரின் மகன் சபரிகிருஷ்ணன் (வயது26). இவர் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியை சேர்ந்த ஜெயா – மோகன் ஆகியோரின் மகள் ரேவதியும், சபரி கிருஷ்ணனும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அதனை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் 20.8.21 அன்று திருமண நாள் குறித்து, அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இருவீட்டாரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

10 ஆண்டுகள் காதலித்த இருவரும் ஒன்று சேர 10 நாட்களே இருக்கும் நிலையில், கடந்த 2021 ஜூலை 7-ந்தேதி வேளாங்கண்ணியில் மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்றும்போது சபரி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ரேவதி, காதலனின் மரணத்தை தாங்க முடியாமல் மிக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். பின்னர் மனதை தேற்றிக்கொண்ட ரேவதி மகனை இழந்து வாடும் தனது காதலனின் வயதான தாய், தந்தையின் நிலைமையை நினைத்து வேதனையடைந்தார்.

இதையடுத்து அவர்களோடு சேர்ந்து வாழ முடிவெடுத்த அவர் தனது வயதான மாமியார், மாமனாருக்கு பணிவிடைகள் செய்து அவர்களை பாதுகாக்கும் முடிவோடு காதலனின் வீட்டிற்கு சென்றார். திருமணமே ஆகவில்லை. ஆனால் மருமகளாகவே நினைத்து வீட்டிற்கு வந்து தங்கி வயதான தங்களுக்கு தனது பெற்றோர் போல் நினைத்து பணிவிடைகள் செய்யப்போகிறேன் என்ற ரேவதியை பார்த்து சபரி கிருஷ்ணனின் பெற்றோர் கைகூப்பி கண் கலங்கினர்.

இதையடுத்து கடந்த 11 மாதங்களாக தனது காதலன் நினைவுகளை மட்டும் சுமந்து மாமனார், மாமியாருக்கு அனைத்து பணிவிடைகளையும் ரேவதி செய்து வருகிறார்.

மருமகள் தங்கள் வீட்டில் வாழ்வதால் மகனின் நினைவோடு நாங்கள் எங்கள் மருமகளை பார்க்கிறோம் என கண்ணீர் மல்க கோவிந்தராஜ் – பத்மாவதி கூறினர்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் சபரி கிருஷ்ணனின் தந்தை கோவிந்தராஜ், கூலி வேலைக்கு செல்லும் அவருடைய சகோதரர் என ஒட்டுமொத்த குடும்பமும் அரசு வேலையில் இருந்த சபரி கிருஷ்ணனின் வருவாயை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்துள்ளனர்.

தற்போது கடும் சிரமத்தை சந்திப்பதாகவும், சபரி கிருஷ்ணன் இறப்பிற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் கூறிய மின்வாரிய அலுவலர்கள் 8 மாதங்களாகியும் கண்டுகொள்ளவில்லை என்று சபரி கிருஷ்ணனின் சகோதரர் வேதனை தெரிவித்தார்.

Related posts

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ட்வீட் – அப்பாவை பற்றி பேசும் முன் இதை யோசித்து பேசுங்கள்:

nathan

நீச்சல் உடையில் பார்வதி நாயர் படுகிளாமர்

nathan

கடைதிறப்பு விழாவில் உண்மையை உளறிய கீர்த்தி சுரேஷ்

nathan

ஒரே நாள் தான்…மொத்தமாக மாறிப்போன வாழ்க்கை!!

nathan

மாணவிகளிடம் அத்துமீறல்?தேடப்படும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்!

nathan

72 வயதிலும் ஒரு காட்டையே உருவாக்கி, பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டி

nathan

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அறிவித்தல்

nathan

முதல் கணவரால் அந்த பழக்கத்திற்கு ஆளான ஊர்வசி..

nathan

மஞ்சிமா உடன் முதல் HONEYMOON சென்ற நடிகர் கவுதம் கார்த்திக்

nathan