25.5 C
Chennai
Monday, Jan 27, 2025
19
சைவம்

புளியானம்! வாசகிகள் கைமணம்!!

புளியானம்

தேவையானவை: கெட்டி புளிக்கரைசல் – அரை கப், சீரகம் –  ஒரு ஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6, கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, தோலுரித்த சின்ன வெங்காயம் – ஒரு கப், கெட்டி தேங்காய்ப்பால், 2-ம் தேங்காய்ப்பால் – தலா ஒரு கப், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தேங்காய் எண்ணெயை சூடாக்கி… சீரகம், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி,  புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன், 2-ம் தேங்காய்ப்பால் சேர்க்கவும். பிறகு, முதல் தேங்காய்ப்பால், அரிசிமாவு சேர்த்து… சற்றே இறுகி, கூட்டு போல வரும் வரை கைவிடாமல் கிளறவும். உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

இது ஒரு ஸ்ரீலங்கா டிஷ் ஆகும். சப்பாத்தி, தோசையுடன் சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம்.

19

Related posts

சூப்பரான சுவையான கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி?

nathan

பலாக்காய் குழம்பு செய்ய வேண்டுமா!

nathan

கறிவேப்பிலை மிளகு குழம்பு

nathan

அரிசி பருப்பு சாதம்

nathan

சோளம் மசாலா ரைஸ்

nathan

நெய் சாதம் வைப்பது எப்படி

nathan

சென்னா தேங்காய்ப்பால் குழம்பு

nathan

தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு

nathan

வாழைத்தண்டு சாதம்

nathan