26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
15 1434360160 06 ovulation
மருத்துவ குறிப்பு

கருத்தரிப்பது குறித்து மக்களிடையே இருக்கும் சில தவறான கருத்துக்கள்!

இன்றைய காலத்தில் பல ஆண்களும், பெண்களும் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்திருப்பார்கள். ஆனால் வீட்டில் உள்ளோரின் கட்டாயத்தால் பலரும் சீக்கிரமே திருமணம் செய்து கொள்கின்றனர். மேலும் திருமணம் முடிந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டிருப்பார்கள்.

இருப்பினும் நம் மக்களிடையே உள்ள கட்டுக்கதைகளால் பலரும் அஞ்சுகின்றனர். உதாரணமாக, 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. சுய இன்பம் கண்டால் குழந்தைப் பெற்றுக் கொள்ள முயலும் போது பிரச்சனை ஏற்படும் என்பது போன்ற கட்டுக்கதைகளால் புது தம்பதியர்கள் பயப்படுகின்றனர்.

ஆனால் இவை அனைத்தும் உண்மை அல்ல. இங்கு மக்களை குழப்பமடையச் செய்யும் மற்றும் கருத்தரிப்பது குறித்து மக்களிடையே இருக்கும் சில தவறான கருத்துக்களும், கட்டுக்கதைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெளிவாக இருங்கள்.

30-35 வயதிற்கு மேல் பெண்களின் கருவுறுதிறன் குறைந்திருக்கும்

பெண்களுக்கு அவர்களின் 21-26 வயதிற்குள் கருவுறுதிறன் அதிகம் இருக்கும் என்பது உண்மை தான். அதற்காக 30-35 வயதிற்கு மேல் கருத்தரிக்க முடியாது என்று அர்த்தமில்லை. மேலும் தற்போது பல பெண்கள் 30 வயதிற்கு மேல் தான் கருத்தரித்து, குழந்தையைப் பெற்றுக் கொள்கின்றனர்.

குறிப்பிட்ட காலத்தில் தான் உறவு கொள்ள வேண்டும்

குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் தான் முடியும் என்ற கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் உண்மையில், தம்பதியர்கள் தங்களுக்கு எப்போது சௌகரியமாக உள்ளதோ, அப்போது உடலுறவில் ஈடுபட்டாலே குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதிக சுய இன்பம் கூடாது

சுய இன்பம் என்பது ஒரு இயற்கையான ஒரு நிகழ்வு. சுய இன்பம் காண்பதற்கும், கருவுறுதலில் உள்ள பிரச்சனைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. ஏனெனில் ஆண்களின் உடலானது ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய விந்தணுவை உற்பத்தி செய்யும். உண்மையில் சொல்லப்போனால், சுய இன்பம் காணாமல் இருந்தால் தான் கருவுறுதலில் பிரச்சனை ஏற்படும். எப்படியெனில் விந்தணுவை ஒரு குறிப்பிட்ட காலத்தில் வெளியேற்றாமல் இருந்தால், அதனால் விந்தணுவின் தரம் குறைந்துவிடும். ஆகவே சுய இன்பம் கண்டால் அஞ்ச வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் சுய இன்பம் காண வேண்டாம். ஏனெனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெண்கள் உச்சக்கட்டம் அடைய வேண்டும்

கருத்தரிக்க வேண்டுமெனில் பெண்கள் உடலுறவின் போது உச்சக்கட்டத்தை கட்டாயம் அடைய வேண்டும் என்ற தவறான கருத்தும் மக்களிடையே உள்ளது. ஆனால் உண்மையில், பெண்கள் உச்சக்கட்டத்தை அடைய வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை; கருத்தரிக்க ஆண்களின் விந்தணுவே போதும்.

உடலுறவு கொள்ளும் நிலை

சிலர் கருத்தரிக்க முயலும் தம்பதியர்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் உடலுறவில் ஈடுபட்டால் தான் கருத்தரிக்க முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் அப்படி எந்த ஒரு நிலையும் அவசியம் இல்லை. விந்தணுவிற்கு இயற்கையாகவே கருப்பையை அடையத் தெரியும்.

14 ஆம் நாளில் உடறவில் ஈடுபடுவது நல்லது

உண்மையிலேயே இது கட்டுக்கதையே. மாதவிடாய் சுழற்சியின் 5 ஆவது நாளுக்கு பின்னர் அவர்களின் ஓவுலேசன் காலம் என்பதால் இந்நாளுக்கு பின் எப்போது உடலுறவில் ஈடுபட்டாலும் கருத்தரிக்கலாம்.

கருத்தடை மாத்திரைகள்

கருவுறுதிறனை பாதிக்கும் பெரும்பாலான பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எடுத்தால் கறுவுறுதிறன் பாதிக்கப்படும் என்று நினைக்கினற்னர். ஆனால் கருத்தடை மாத்திரைகளை எடுப்பதால் ஓவுலேசன் தற்காலிகமாகத் தான் தடுக்கப்படுகிறது. அவற்றை எடுப்பதை நிறுத்தினால் மீண்டும் பழைய படி ஓவுலேசன் நடைபெறும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

15 1434360160 06 ovulation

Related posts

பல நோய்கள் ஏற்பட காரணமாய் இருக்கும் மலச்சிக்கல்

nathan

பற்களில் கறை படிந்துள்ளதா?

nathan

கருப்பை நீர்கட்டியால் ஏற்படும் வலியை குணப்படுத்த சூப்பர் டிப்ஸ்..!

nathan

இத படிங்க சீராக்கும் கருஞ்சீரகம் சீறிப்பாய்ந்து.!

nathan

உங்கள் எலும்புகள் பலவீனமாகி பெரிய ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

பசியின்மையை போக்கும் நெல்லிக்காய்

nathan

நாட்டு மருந்துக் கடை – 9 ~ பெட்டகம்

nathan

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை போக்கும் கருஞ்சீரகம்

nathan

உள் தொண்டையில் அழற்சி ஏற்பட்டுள்ளதா? ஒரே நாளில் சரிசெய்யும் சில எளிய வழிகள்!

nathan