23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
23 1435055766 1
ஆரோக்கிய உணவு

ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் மட்டுமில்ல, ஒரு பீர் குடிச்சாலும் நல்லதாமா!!!

தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை காணவே தேவை இல்லை என்பது பழமொழி. ஆனால், ஒரு நாளுக்கு அளவாக ஒரு தடவை பீர் குடித்தாலும் கூட மருத்துவரை அணுக வேண்டிய தேவை இல்லை போல. ஏனெனில், ஆப்பிள் மற்றும் பீரில் உள்ள சத்துகளை ஒப்பிட்டுப்பார்த்தால் அப்படி தான் இருக்கிறது.

தலா நூறு கிராம் ஆப்பிள் மற்றும் பீரை ஒப்பிட்டுப் பார்த்ததில், அதில் உள்ள ஊட்டச்சத்துகளின் சதவீதம் எவ்வாளவு இருக்கிறது என்பதை பற்றி இனிக் காணலாம்…

கலோரிகள்

நூறு கிராம் ஆப்பிள் மற்றும் பீரை ஒப்பிட்டு பார்த்ததில், ஆப்பிளில் 52 மற்றும் பீரில் 43 என்ற வீதத்தில் கலோரிகள் உள்ளதாய் தெரியவந்துள்ளது.

கொழுப்புச்சத்து

ஆப்பிளில் 0.2 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது (Polyunsaturated fat) மற்றும் பீரில் துளி அளவுக் கூட கொழுப்புச் சத்து இல்லை.

சோடியம், பொட்டசியும்

ஆப்பிளில் 1 மி.கி சோடியமும், பீரில் 4 மி.கி. சோடியமும் உள்ளது. மற்றும் ஆப்பிளில் 107 மி.கி பொட்டாசியமும், பீரில் 27 மி.கி பொட்டாசியமும் உள்ளது.

கார்போஹைட்ரேட்

கார்போஹைட்ரேட் அளவு அப்பிளில் 14 கிராமும் (மொத்த சத்துகளின் அளவில் இருந்து 4%), பீரில் 3.6 கிராமும் இருக்கிறது.

வைட்டமின்

வைட்டமின் சத்துகளில் ஆப்பிளில் வைட்டமின் சி 4.6 மி.கி இருக்கிறது. பீரில் வைட்டமின் சத்து ஏதும் இல்லை.

கால்சியம்

எலும்புக்கு வலு சேர்க்கும் கால்சியம் பொறுத்தவரை, ஆப்பிளில் 6 மி.கி மற்றும் பீரில் 4 மி.கி இருக்கிறது.

புரதம்

தலா நூறு கிராம் ஆப்பிள் மற்றும் பீரை பரிசோதித்ததில் ஆப்பிளில் 0.3 மி.கி மற்றும் பீரில் 0.5 மி.கி புரதச்சத்து இருக்கிறது.

மக்னீசியம்

ஆப்பிளில் 5 மி.கி மற்றும் பீரில் 6 மி.கி அளவு மக்னீசியத்தின் அளவு இருக்கிறது.

சர்க்கரை அளவு

ஆப்பிளில் 10 மி.கி சர்க்கரையின் அளவு இருக்கிறது. பீரில் சர்க்கரை அளவு இல்லை.

முக்கிய குறிப்பு

மேல்கூறிய அணைத்து சத்து சதவீதமும் தலா நூறு கிராம் ஆப்பிள் மற்றும் பீரில் உள்ள அளவு மட்டுமே. ஏறத்தாழ இரண்டிலுமே ஒரே அளவில் தான் சத்துகள் இருக்கிறன்றன என்றாலும், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, அந்த வகையில் ஆப்பிளை விட பீர் அளவுக்கு மீறினால் கொடிய நஞ்சு என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!

23 1435055766 1

Related posts

கர்ப்ப காலத்தில் பெண்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா?

nathan

நீங்கள் தினமும் 3 ஸ்பூன் சாப்பிட்டால் புற்றுநோய் முற்றிலும் குணமாகும் தெரியுமா?

nathan

சுவையையும் ஆபத்தையும் சேர்த்து தரும் அஜினோமோட்டோ.

nathan

இரத்த உற்பத்திக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் | Food Items That Will Increase Blood

nathan

உங்களுக்கு தெரியுமா இதய நோய், பக்கவாதத்தை தவிர்க்கும் முட்டை

nathan

அற்புத மருத்துவகுணம் நிறைந்த ஆடாதோடை…! சூப்பர் டிப்ஸ்

nathan

வாயுப்பொருள் என்று ஒதுக்கி வைக்காதீர்கள்.. உருளைக்கிழங்கு அதிகமான பயன் தரக்கூடிய அற்புதம்..!

nathan

60 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி நோய்களின் தாக்கங்களுக்கு ஆளாகாமல் தப்பிக்க இத படிங்க…

sangika

பனங்கிழங்கு ரொம்ப பிடிக்குமா?அப்ப இத படிங்க!

nathan