25.7 C
Chennai
Friday, Feb 14, 2025
2155558 Dead L
Other News

சிறுவன் வெறிச்செயல் – கணவன், மனைவி சுட்டுக்கொலை…

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள தக்ரோகி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (வயது 62). இவரது மனைவி சரோஜ். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ராஜேந்திர சிங் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர்களுடன் ராஜேந்திர சிங்கின் சகோதரியும், அவரது மகனும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திர சிங்குக்கும் அவரது சகோதரிக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திர சிங் சகோதரியின் மகனான சிறுவன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜேந்திர சிங், அவரது மனைவி மற்றும் மகன் 3 பேரையும் சரமாரியாக சுட்டான்.

 

இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திர சிங் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக இறந்தனர். அவர்களின் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உறவுக்காரர்களை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

விருதுகளை வென்ற ரன்பீர் கபூர், ஆலியா பட்..

nathan

இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம்! இலங்கை தமிழ் எம்பிக்கள்

nathan

நயன்தாரா போலேவே இருக்கும் இளம் பெண்…

nathan

புகழின் உச்சிக்கு செல்லப்போகும் ராசிக்காரர்கள்..சனி பெயர்ச்சி

nathan

தவமிருந்து பெற்ற குழந்தையை தவிக்கவிட்டு தாய் எடுத்த வி-பரீத முடிவு!!

nathan

முடியை கருப்பாக மாற்ற ஏழு நாட்கள் போதும்

nathan

மோசமான உடையில் சின்னத்திரை நமீதா

nathan

பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்

nathan

திருமண நாளை கொண்டாடிய நடிகர் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா

nathan