Other News

தலை வாசல் படியில் தலை வைத்து படுக்கக்கூடாது ஏன் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

நாம் வசிக்கும் வீட்டிற்கு தலைவாசல் முக்கியமானது. வீட்டிற்குள் வருபவர்களை வரவேற்கவும் காலில் உள்ள தூசிகளை துடைத்து விட்டு வரவும் மிதியடிகளை போட்டிருப்போம். அந்த மிதியடி சிவப்பு நிறமானதாக இருந்தால் அது சிறப்பானது. காரணம் சிவப்பு பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்குமாம். எனவேதான் விஐபிக்களை வரவேற்க ரெட் கார்ப்பெட் விரித்து வரவேற்கும் பழக்கம் உருவானது.

ஒரு வீட்டிற்கு தலை வாசல் மிக முக்கியமாகும். எவ்வளதான் பெரிய வீட்டை கட்டினாலும் வீட்டிற்கு வாசல் முறையாக அமையவில்லை என்றால் அவ்வீட்டில் லட்சுமி குடியிறுக்கமாட்டாள். லட்சுமி தேவி வீட்டில் புகுந்தால் தான் வீடு சுபிட்சமடையும். சகல சம்பத்துக்களும் கிடைக்கும். நன்மையாகட்டும், தீமையாகட்டும், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி யாகட்டும் எதுவுமே வாசலை கடந்துதான் நம்மை நோக்கி வருகின்றன. நல்லனவற்றை உள்ளே அனுப்பி தீயனவற்றை வெளியே அனுப்பும் பொறுப்பு வீட்டின் தலை வாசலுக்கு மட்டுமே உண்டு.

தலைவாசல்

 

நம் வீடு என்பது நாம் வாழும் கோவில் போன்றது. நாம் கோவிலாக கருதப்படும் அந்த வீட்டில், முன் வாசல் அதாவது நில வாசற்படியானது, நல்ல சக்திகளை உள்ளே ஈர்த்து, கெட்ட சக்திகளை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், நாம் அதனை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அஷ்ட லட்சுமிகள்

 

நம் வீட்டுத் தலைவாசல் பகுதி என்பது அந்தக் காலங்களில், வீட்டின் உள்ளே செல்பவர்கள் தலை குனிந்து செல்லும் அளவிற்கு தாழ்வாக தான் அமைந்திருக்கும். நம் வீட்டு வாசற்படியில் மகாலட்சுமியும், அஷ்ட லட்சுமியும் குடி கொண்டிருப்பதாலும், கும்ப தேவதைகள் வாசலில் இரண்டு பக்கமும் அமர்ந்திருப்பதாலும், அவர்களை நாம் வணங்கும் வகையில், தலையை குனிந்து செல்வதற்காகவே அப்படிப்பட்ட அமைப்பு அந்த காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி நாம் குனிந்து செல்லும்போது அந்த வாசற்படியை நம் கால்களால் மிதிக்காமல் உள்ளே செல்ல வேண்டும்.

தலைவாசலுக்கு மாவிலை தோரணம்

 

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

காலையில் எழுந்தவுடன் தலை வாசற்படியை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். முடியாதவர்கள் ஈரத்துணியால் துடைத்து சுத்தம் செய்து மஞ்சள் தேய்த்து பொட்டு வைக்க வேண்டும். நிலைப்படியில் மாவிலைத் தோரணம் விசேஷ நாட்களில் மட்டும் தான் கட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. விசேஷம் அல்லாத நாட்களில் கூட 11 மாவிலைகளை நம் வீட்டு வாசலில் தோரணமாக தொங்கவிடுவது நல்லது. அது துர் சக்திகளை நம் வீட்டின் உள்ளே அண்டவிடாது. மாலைகள், தோரணங்கள் கட்டுவதற்காக அடிக்கப்படும் அணியானது, வாசற்படியின் மேல் அடிக்காமல் அதில் இருந்து தள்ளி சுவற்றில் அடிப்பது நல்லது.

குலதெய்வம்

 

 

நம் வீட்டு வாசல் கதவில் குலதெய்வம் குடியிருக்கும் என்பதும் ஒரு ஐதிகம். இதனால் சத்தம் போடாமல் கதவினை திறப்பதும் கதவினை அடைப்பதும் நல்லது. நாம் இடும் சத்தம் குலதெய்வத்திற்கு இடையூறாக இருக்ககும். நம் வீட்டு வாசல் படியின் முன்னால் ஒரு கிண்ணத்தில் நீரூற்றி அதில் மலர்களை நிரப்பி வைப்பது நல்லது. கிண்ணத்தில் உள்ள மலர்கள் நம் வீட்டிற்குள் நல்ல சக்தியை ஈர்க்கும் தன்மையைக் கொண்டது. கிண்ணத்தில் உள்ள நீரையும் மலரையும் தினமும் மாற்ற வேண்டும்.

செல்வம் தரும் அடையாளங்கள்

 

மகாலட்சுமி புகைப்படத்தை நம் வீட்டு வாசலில் மாட்டி வைப்பது சிறந்தது. அப்படி நம் வீட்டு வாசலில் லட்சுமி புகைப்படம் இருக்குமேயானால் செருப்புகளை வாசலின் வெளியே விட்டு வர வேண்டும். கும்ப கலச படத்தினை நம் வீட்டு வாசலில் வைத்திருந்தால் நோய் நொடிகள் நம் வீட்டை அண்டாது. தலை வாசலில் ஸ்வஸ்திக் அடையாளம் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை தேடித்தரும். திருப்பதி ஏழுமலையான் அலங்கார ரூபாமாய் இருக்கும் படத்தை தலைவாசலுக்கு நேராக மாட்டி வைக்கலாம்.

தூங்காதீங்க

 

நம் வீட்டு வாசல்படியில் கிரகலஷ்மி வாசற்படியில் வாசம் செய்கின்றாள் என்பதனால் அதில் நாம் சில விஷயங்களை செய்யக்கூடாது. நில வாசற்படியில் நின்று கொண்டு தும்புவது, தலை வைத்து படுப்பது, வாசற்படியின் மேல் அமர்வது, வாசலில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை பற்றிய குற்றம் குறைகளை பேசுவது, நகம் கடிப்பது, இப்படித் தவறான விஷயங்களை அந்த இடத்தில் நாம் செய்யக்கூடாது. இது துர் தேவதைகளை நாமே உள்ளே அழைப்பதற்கு சமமாகும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button