Other News

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஆனந்த் அம்பானி

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் கடந்த 12ம் தேதி திருமணம் நடந்தது. அப்போது மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி மணமக்களை வாழ்த்தி திருமண பரிசுகளை வழங்கினார். பின்னர், ஆனந்த் அம்பானி பிரதமரின் பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்.

திரை நட்சத்திரங்களைப் பொறுத்த வரையில், இரண்டாவது நாள் நிகழ்ச்சியின்போது, ​​நடிகர் ரஜினிகாந்த் பாரம்பரிய உடையில் தோன்றி கவனத்தை ஈர்த்தார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது பேத்தி நவ்யாவுடன் மணமக்களை வாழ்த்தினார்.

மறுபுறம், நடிகை ஐஸ்வர்யா ராய் வண்ணமயமான உடையில் தனியாக தோன்றி பலரின் கண்களை கவர்ந்தார். நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூரும் கண்ணைக் கவரும் உடை அணிந்திருந்தார். நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து பல்வேறு போஸ்களை அடித்தார். நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் அம்பானியின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல், சல்மான் கான், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரும் ஸ்டைலாக வந்திருந்தனர். பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய பாணியில் மணமக்களை வாழ்த்தினார்கள்.

சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், கௌசிக் சக்ரவர்த்தி, சோனு நிகம் மற்றும் ஹரிஹரன் போன்ற பிரபலங்களும் மணமக்களை இசை மழையுடன் வரவேற்றனர்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சண்ட்டை வாழ்த்தினர்.

 

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீராங்கனை மேரி கோம், பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், கிரிக்கெட் வீரர் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் கலந்து கொண்டார்.

Related posts

விஜயகாந்த் துயில் கொள்ளப்போகும் சந்தனப் பேழை

nathan

ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த பெண்!

nathan

விஜய் உடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்த பிக் பாஸ் ஜனனி..

nathan

IPL வின்னர் இந்த டீம் தான் – ஜோதிடம் சொன்ன கோலங்கள் சீரியல் நடிகர்.

nathan

மதகஜராஜா : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

nathan

காயமடைந்த பிரபல நடிகர் மருத்துவமனையில் மரணம்!

nathan

கணவர் விக்கி உடன் சாலையில் நடந்து சென்ற நயன்தாரா

nathan

நடிகை அஞ்சலியா இது? வைரலாகும் புகைப்படம்

nathan

‘இந்த’ 4 ராசிக்காரர்களுக்கு மன தைரியம் அதிகம்! அது யாருக்காவது தெரியுமா?

nathan