26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
b816a411d502b1e7a2f8c25381d1bf1 3x2 1
Other News

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஆனந்த் அம்பானி

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் கடந்த 12ம் தேதி திருமணம் நடந்தது. அப்போது மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி மணமக்களை வாழ்த்தி திருமண பரிசுகளை வழங்கினார். பின்னர், ஆனந்த் அம்பானி பிரதமரின் பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்.

திரை நட்சத்திரங்களைப் பொறுத்த வரையில், இரண்டாவது நாள் நிகழ்ச்சியின்போது, ​​நடிகர் ரஜினிகாந்த் பாரம்பரிய உடையில் தோன்றி கவனத்தை ஈர்த்தார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது பேத்தி நவ்யாவுடன் மணமக்களை வாழ்த்தினார்.

மறுபுறம், நடிகை ஐஸ்வர்யா ராய் வண்ணமயமான உடையில் தனியாக தோன்றி பலரின் கண்களை கவர்ந்தார். நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூரும் கண்ணைக் கவரும் உடை அணிந்திருந்தார். நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து பல்வேறு போஸ்களை அடித்தார். நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் அம்பானியின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.b816a411d502b1e7a2f8c25381d1bf1 3x2 1

அதேபோல், சல்மான் கான், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரும் ஸ்டைலாக வந்திருந்தனர். பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய பாணியில் மணமக்களை வாழ்த்தினார்கள்.

சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், கௌசிக் சக்ரவர்த்தி, சோனு நிகம் மற்றும் ஹரிஹரன் போன்ற பிரபலங்களும் மணமக்களை இசை மழையுடன் வரவேற்றனர்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சண்ட்டை வாழ்த்தினர்.

 

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீராங்கனை மேரி கோம், பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், கிரிக்கெட் வீரர் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் கலந்து கொண்டார்.

Related posts

பூஜா ஹெக்டே உச்சகட்ட கிளாமர் உடையில் போட்டோஷூட்

nathan

மகனோடு வந்து காதலரை கரம்பிடித்த Amy Jackson!

nathan

கொழுந்தியாளை இரண்டாவது திருமணம்!நவரச நாயகனின் காதல் லீலைகள்…

nathan

பல நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்

nathan

என் தங்கச்சி ஓரினச்சேர்க்கையாளரா..? – பிக்பாஸ் மாயா-வின் அக்கா பதில்..!

nathan

இடையழகை காட்டிய ரம்யா பாண்டியன்!தாவணி போடாமல் ஹாட் போஸ்!

nathan

போரழகில் ஹீரோயின் போல ஜொலிக்கும் தொகுப்பாளர் மாகாபாவின் மகள்! நீங்களே பாருங்க.!

nathan

பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்படும் நிக்சன்….

nathan

சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வெட்டிக்கொலை:தங்கை உள்பட 5 பேர் கைது

nathan