28.1 C
Chennai
Sunday, Nov 17, 2024
201605091409298364 how to make Anchovy Fish nethili fish fry SECVPF
அசைவ வகைகள்

சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி

சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான நெத்திலி மீன் வறுவல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

நெத்திலி மீன் – அரை கிலோ
மிளகாய் தூள் – 25 கிராம்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
சீரக தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
ஓமம் – கால் டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
பூண்டு – ஐந்து பல் (நசுக்கியது)
சோள மாவு – 25 கிராம்
அரிசி மாவு – 10 கிராம்
முட்டை வெள்ளை கரு – 1

செய்முறை :

* நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் நெத்திலி மீன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், சீரக தூள், ஓமம், கறிவேப்பில்லை, நசுக்கி பூண்டு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து குளிர்சாதன பெட்டியில் 1 மணிநேரம் வைக்கவும்.

* மீன் கலவையை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்த பிறகு, அதில் சோள மாவு, அரிசி மாவு, முட்டை வெள்ளை கரு சேர்த்து நன்றாக பிசைந்து 15 நிமிடம் வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

* சுவையான நெத்திலி மீன் வறுவல் ரெடி.

* ஓமம் விரும்பாதவர்கள் சேர்க்க தேவையில்லை. ஓமம் சேர்த்தால் நன்றாக இருக்கும்
201605091409298364 how to make Anchovy Fish nethili fish fry SECVPF

Related posts

இது வேற லெவல்!? ஆட்டுக்கால் குழம்பு செய்வது எப்படி..

nathan

அரைக்கீரை கொத்துக்கறி மசாலா

nathan

சூப்பரான முட்டை மஞ்சூரியன்

nathan

செட்டிநாடு மட்டன் கிரேவி செய்வது எப்படி?

nathan

சைனீஸ் இறால் வறுவல்

nathan

ருசியான நாட்டுக்கோழி வறுவல். ரொம்ப சிம்பிளா செய்ய,இப்படி ட்ரை பண்ணிப் பாருங்க

nathan

மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

nathan

எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்முறை விளக்கம்

nathan

முனியாண்டி விலாஸ் கோழி குழம்பு / Muniyandi Vilas Chicken Curry

nathan