27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
23
சிற்றுண்டி வகைகள்

இஞ்சி துவையல்!

23

இஞ்சி துவையல்.!

தேவையானப் பொருட்கள்:

இஞ்சி – 1/2 கப் (தோல்சீவி நறுக்கியது)
தேங்காய் துருவல் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம்பருப்பு – 1 ½ டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
பெருங்காயம் சிறிதளவு
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

இஞ்சியைத் தோல்சீவி நன்றாகக் கழுவி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.

இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிதுநேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.

தேங்காயைத் துருவல், புளி, பச்சை மிளகாயைக் கலந்து ஆற வைக்கவும்
ஆறியதும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு ஒரு ஓட்டு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும். கல் உப்பு உபயோகிப்பது இன்னும் சுகம்.

இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது.

விரும்பினால் அரை டீஸ்பூன் கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பும் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.

பிரயாணங்களுக்கு எடுத்துச் செல்லும்போது தேங்காயையும் நன்கு வதக்கியே அரைத்து எடுத்துச் செல்லலாம். சீக்கிரம் கெடாது.

Related posts

பேபி கார்ன் புலாவ்

nathan

இலகுவான அப்பம்

nathan

சூப்பரான ஓட்ஸ் வெஜிடேபிள் ரொட்டி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ்: உப்பு சீடை

nathan

கேரளத்து ஆப்பம் செய்முறை

nathan

இன்ஸ்டண்ட் கோதுமை ரவா இட்லி – MTR Style Instant Wheat Rava Idli Recipe – Instant Breakfast Recipes

nathan

புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை டீ

nathan

பூரி

nathan

பலாப்பழ தோசை

nathan