ஜில்லு ஜில்லு குல்ஃபி ஐஸ்கிரீம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
பால்- 200 மில்லி லிட்டர்
விப்பிங் கிரீம்- 2 கப்
பிஸ்தா-2 கப்
வெண்ணிலா எசன்ஸ்- 2 ஸ்பூன்
ஏலக்காய்- சிறிதளவு
குங்குமப் பூ- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் குங்கும பூ கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து காய்ச்சிய பாலை ஆறவிட்டு ப்ஃரிஜில் வைக்கவும். அடுத்து இப்போது பாத்திரத்தில் க்ரீம் சேர்த்து கலக்கவும். அடுத்து இந்த கிரீமுடன் பாலையும் வெண்ணிலாஎசன்ஸையும் சேர்க்கவும். அடுத்ததாக அதில் பிஸ்தா, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ கலந்த திரவத்தைச் சேர்க்கவும். இதன் மூலம் குல்ஃபி ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான பேஸ் தயார். அவ்வளவு தான் இவைகளை மீண்டும் ஒரு முறை கலக்கி ப்ஃரிஜில் ஃப்ரீசரில் வைக்கவும். பின் அது ஃப்ரீசரில் கெட்டியானதும் சுவையான குல்பி ஐஸ்கிரீம் தயார்.