29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
godhumai carrot adai
சிற்றுண்டி வகைகள்

கோதுமை கேரட் அடை

தேவையான பொருட்கள் : முழு கோதுமை – 200 கிராம்,பச்சரிசி – 150 கிராம்,கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 100 கிராம்,காய்ந்த மிளகாய் – 12,சீரகம் – 1 டீஸ்பூன்,பெருங்காயம் – அரை டீஸ்பூன்,துருவிய கேரட், முட்டை கோஸ் – அரை கப்,எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :* முழு கோதுமையை 10 மணி நேரம் ஊறவைக்கவும்.* பச்சரிசி, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் இவற்றை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.* இவற்றை ஊறிய கோதுமையுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.* அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயம், சீரகம், துருவிய கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.* தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை அடையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.* தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.godhumai carrot adai

Related posts

உருளைகிழங்கு ரெய்தா

nathan

சோயா இடியாப்பம்

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் அச்சு முறுக்கு

nathan

தக்காளி பஜ்ஜி

nathan

கம்பு புட்டு

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பொரி சாட் மசாலா

nathan

கேழ்வரகுப் பணியாரம்! பாரம்பர்ய உணவுப் பயணம்!!

nathan

மாலை வேளையில் வெங்காய வடை

nathan

சுவையான பட்டாணி தோசை

nathan