29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
ld3921
மருத்துவ குறிப்பு

கொசுவை விரட்டும் போர்வை!

mos quit சகோதரிகள் கஸ்தூரி – ஷ்ரேயா

ஃபேஷன் ஷோ, ராம்ப் வாக், பிரபலங்களுக்கான பிரத்யேக காஸ்ட்யூம் டிசைனிங், காஸ்ட்லியான பொட்டிக்… டெக்ஸ்டைல் பின்னணியில் இருந்து வருகிற இளம் பெண்களின் சாய்ஸ் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும். மும்பையை சேர்ந்த சகோதரிகள் கஸ்தூரி பொடார் மற்றும் ஷ்ரேயா பொடாரின் கனவு புதுமையாக இருக்கிறது. மாநிலங்கள் தோறும் கொசுத் தொல்லைக்குத் தீர்வு கண்டுபிடிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிற வேளையில், பொடார் சகோதரிகளின் புதுமைக் கண்டுபிடிப்பு புருவம் உயர்த்த வைக்கிறது!

‘போத்திக்கிணும் படுத்துக்கலாம்… படுத்துக்கிணும் போர்த்திக்கலாம்’ என்கிற மாதிரி இவர்கள் கண்டுபிடித்திருப்பது கொசுத் தொல்லையிலிருந்து மீட்கும் போர்வை! போர்வை நெய்யப்பட்டு, சாயம் பூசப்பட்டதும் ஸ்விட்சர்லாந்தில் இருந்து வரவழைக்கப்படுகிற பெர்மெத்ரின் (Permethrin) என்கிற ரசாயனத்தில் முக்கி எடுக்கப்படுகிறது. போர்வை, ரசாயனம் முழுவதையும் உறிஞ்சிக் கொண்டதும் ஹீட் பிராசஸரினுள் செலுத்தப்படுகிறது.

பிறகு போர்வையின் இருபுறமும் இஸ்திரி செய்யப்படுகிறது. அதன் மூலம் ரசாயனமானது போர்வையின் நூல் இழைகளுக்கு இடையில் லாக் செய்யப்படுகிறது. துவைத்தாலும் அந்த ரசாயனமானது வெளியேறாது. இந்த ரசாயனமானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பாதுகாப்பானது என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அளவீடுகளுக்கேற்ப ஜெர்மனி மற்றும் மும்பையில் உள்ள பரிசோதனைக்கூடங்களில் உறுதி செய்துள்ளன.

பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பையில. பிளஸ் டூ முடிச்சதும் நான் சைக்காலஜி படிக்கவும் கஸ்தூரி டெக்ஸ்டைல் டிசைனிங் படிக்கவும் அமெரிக்கா போனோம். எங்க குடும்பமே டெக்ஸ்டைல் பிசினஸ்ல இருக்கிறவங்கதான். அமெரிக்காவுல படிப்பை முடிச்சதும் கஸ்தூரி அப்பாகூட டெக்ஸ்டைல் பிசினஸ்ல சேர்ந்துட்டா. நான் மேரிடல் கவுன்சலிங் பண்ணிட்டிருந்தேன்… சில வருஷங்கள் அப்படியே போச்சு…” – அக்கா ஷ்ரேயா ஆரம்பித்து வைக்க தங்கை கஸ்தூரி தொடர்கிறார்.

அப்பாவோட பிசினஸ்தான். ஆனாலும், ஒரு கட்டத்துல அதுல கிரியேட்டிவிட்டி இல்லையோனு தோணினது. புதுமையா ஏதாவது பண்ணணும்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பேன். டெக்ஸ்டைல் டிசைனிங் படிச்சிட்டிருந்தப்ப நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம் ரொம்ப நாளா என் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது. அதாவது, மேற்கத்திய நாடுகள்ல ஆர்மியில வேலைசெய்யறவங்களோட யூனிஃபார்ம்ஸை எல்லாம் கொசுக்களை விரட்ட ஒருவிதமான கெமிக்கல்ல முக்கியெடுத்துதான் தைப்பாங்களாம்.

அந்தத் தகவல் பயங்கர ஆச்சரியமா இருந்தது. அடிப்படையில நம்ம நாடு கொசுக்களுக்கு பேர் போனது. உலகம் முழுக்க கொசுத் தொல்லையால மக்கள் அவதிப்பட்டுக்கிட்டிருக்காங்க. டெங்குவாலயும் மலேரியாவாலயும் பாதிக்கப்படற மக்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது. ஏழை, பணக்காரங்கனு யாரும் இந்த நோய்கள்லேருந்து தப்பிக்க முடியறதில்லை. குட்டைகள்லயோ, செடிகள் வைக்கிற தொட்டிகள்லயோ 2 இன்ச் அளவுக்கு தண்ணீர் தேங்கினாலே, அது டெங்கு கொசுக்களுக்கு முட்டையிட ஏதுவான இடமாயிடும்னு சொல்றாங்க. உயிரையே பறிக்கிற அளவுக்கு ஆபத்தான கொசுக்கள்கிட்டருந்து நம்மைப் பாதுகாக்கஒவ்வொரு வீட்டுக்குள்ளே இருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படணும்.

இதையெல்லாம் பார்த்தபோதுதான் எனக்கு டெக்ஸ்டைல் டிசைனிங் படிக்கிறபோது கேள்விப்பட்ட தகவல் ஞாபகத்துக்கு வந்தது. அதே டெக்னிக்கை சாமானிய மக்களுக்கும் போய் சேரும்படி முயற்சி பண்ணினா என்னனு யோசிச்சேன். இப்படியொரு வித்தியாசமான கொசு விரட்டும் போர்வைக்கான ஐடியா கிடைச்சது. டெக்ஸ்டைல் பின்னணியும் அனுபவமும் கை கொடுத்தது. அக்காகிட்ட சொன்னப்ப என் ஐடியாவை பாராட்டினாங்க. உடனடியா அப்பாகிட்ட 50 லட்சம் பணம் வாங்கினேன். இந்த ஐடியாவுக்கான ஏ டு இஸட் டெக்னாலஜி முழுக்க எனக்குத் தெரிஞ்சிருந்தது. ஆனாலும், எப்படி மார்க்கெட் பண்றது, மக்கள்கிட்ட எப்படி கொண்டு போய் சேர்க்கிறதுனு தெரியலை.

அப்பதான் என் அக்கா ஷ்ரேயாவும் என்னோட இந்த முயற்சியில என்கூட கை கோர்த்தாங்க. அவங்களோட அட்வைஸ் படி ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியோட இணைஞ்சோம். ஏரியா சேல்ஸ் மேனேஜர்ஸை வேலைக்கு எடுத்து ஒரு பக்கா சேல்ஸ் டீமை உருவாக்கினோம். டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் கிட்டருந்து 100 சதவிகிதம் அட்வான்ஸ் வாங்கிட்டுத்தான் பொருளைக் கொடுக்கிறதுனு ஒரு பாலிசியை கொண்டு வந்தோம். ‘டெக்ஸ்டைல் பிசினஸ்னா கடன்லதான் நடக்கும்… இதென்ன புதுசா இருக்கு’னு ஆரம்பத்துல பேசினவங்க, எங்க பொருளைப் பத்திக் கேள்விப்பட்டு அந்த பாலிசிக்கு சம்மதிச்சு வந்தாங்க.

நாங்க ரெண்டே பேர்… அதுவும் அப்பதான் காலேஜ் முடிச்சிட்டு வந்திருந்தோம். 40க்கும் மேலான ஆண்களை வேலைக்கு எடுத்து சேல்ஸை டெவலப் பண்ணினதுதான் பெரிய சவாலா இருந்தது. தடைகளையும் சவால்களையும் தாண்டி, எங்களோட ஒரு வருஷ முயற்சிக்கு பலன் கிடைச்சிருக்கு…” – வெற்றிப் புன்னகையுடன் வழிமொழிகிறார் கஸ்தூரி.

எந்த ஒரு முயற்சியோட பின்னணியிலயும் விமர்சனங்களையும் வெற்றுப் பேச்சுகளையும் தவிர்க்க முடியாது. எங்க விஷயமும் அப்படித்தான். இன்னிக்கு கொசுவை விரட்டறதா சொல்லி மார்க்கெட்ல விளம்பரப்படுத்தப்படற பல தயாரிப்புகளும் அந்த வேலையை முழுமையா செய்யறதில்லை. குழந்தைங்களுக்கு கொசுவை விரட்டற கிரீமை சருமத்துல தடவ முடியாது. கொசுவர்த்திச் சுருளும் எல்லாருக்கும் சரியா வர்றதில்லை.

சுவாசப் பிரச்னைகள் உள்ளவங்களுக்கு அது ஏத்துக்காது. மற்ற பொருட்களும் இப்படித்தான்… இதுல எல்லாம் பக்க விளைவுகளைத் தவிர்க்க முடியறதில்லை. இப்படி எந்தப் பிரச்னையும் இல்லாம ஒரு போர்வை மூலமா கொசுக்கள்கிட்டருந்து தப்பிக்க முடியும்கிறது எவ்ளோ நல்ல விஷயம்? ஆனா, இந்த போர்வையை வாங்கற மக்கள், கான்செப்டை தப்பா புரிஞ்சுக்கிறாங்க. இதை ஏதோ மேஜிக் போர்வைனு நினைச்சுக்கிறாங்க. இதைப் பார்த்தாலே இனிமே வாழ்க்கையில கொசுவே கடிக்காதுனு நினைக்கிறாங்க.

அப்படியில்லை… இந்த போர்வையை உபயோகிக்கிறபோது, கொசுக்கள் போர்வையை தாண்டி உங்களை கடிக்க முடியாது. போர்வையில சேர்க்கப்பட்ட பெர்மெத்ரின் கொசுக்களோட உடம்புல ஏறும். அடுத்த நொடியே கொசுக்கள் செயலிழந்து போயிடும். குழந்தைங்களுக்கும் பெரிய வங்களுக்குமா இப்போதைக்கு ரெண்டு அளவுகள்ல இந்தப் போர்வையை தயாரிக்கிறோம். முழுக்க காட்டனால் செய்யப்படறதால துவைச்சு உபயோகிக்கலாம். வெளியூருக்குப் போனாலும் எடுத்துட்டுப் போற அளவுக்கு வசதியாதான் வடிவமைச்சிருக்கோம்…” என்கிறார் ஷ்ரேயா.

இப்போதைக்கு ஆன்லைனில் (www.mos-quit-o.com) இந்தியா முழுவதும் தங்கள் தயாரிப்பை விற்பனை செய்து கொண்டிருக்கிற பொடார் சகோதரிகள், அடுத்து கொசுக்களை விரட்டும் நைட் டிரெஸ்சை டிசைன் செய்கிற திட்டத்திலும் இருக்கிறார்கள்! ld3921

Related posts

உங்களுக்கு தெரியுமா நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்க குடல்ல ஓட்டை விழுந்திருக்கா ?அப்ப இத படிங்க!

nathan

உடல் துர்நாற்றத்தால் அவதியா? இதோ வீட்டு வைத்தியம்

nathan

காய்ச்சலை குணமாக்கும் நாட்டு மருத்துவ குறிப்புகள்

nathan

டீன்ஏஜ் வயதில் பெண்களிடம் ஏற்படும் தடுமாற்றம்

nathan

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்-தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…முந்திரியில் குப்பை என வீசும் இந்த பகுதியில் தமிழர்கள் மறந்த மருத்துவம்!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆரோக்கியமான பற்களுக்கு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது

nathan

உடல் எடை முதல் மலச்சிக்கல் வரை அனைத்திற்கும் தீர்வு தரும் ஜப்பானிய நீர் சிகிச்சை!

nathan