27.4 C
Chennai
Wednesday, Nov 20, 2024
paneer gravy
Other News

மூலிகை பன்னீர் கிரேவி

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* நெய் – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 3 (நறுக்கியது)

* இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

* பூண்டு – 6 பல் (நறுக்கியது)

* கொத்தமல்லி – 1 கப் (நறுக்கியது)

* புதினா – 1 கப் (நறுக்கியது)paneer gravy

செய்முறை:

* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

Herb Paneer Gravy Recipe In Tamil
* பிறகு அதில் தேவையான நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

* அடுத்து கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

* இறுதியாக சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளித்து கிரேவியில் ஊற்றி கிளறினால், மூலிகை பன்னீர் கிரேவி தயார்.

Related posts

கள்ளக்காதல் மோகம்…தவிக்கும் குழந்தைகள்!

nathan

பிக் பாஸுக்கு பின் நடந்த வெற்றிக் கொண்டாட்டம்,புறக்கணிக்கப்பட்ட அர்ச்சனா

nathan

இதை நீங்களே பாருங்க.! கடற்கரையில் க வ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை அமலாபால்..!

nathan

புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞன்.. துண்டான கை

nathan

உக்ரேனிய மருத்துவரின் பேச்சால் வெடித்த சர்ச்சை !ரஷ்ய வீரர்களுக்கு ஆண்மை நீக்கம்?

nathan

சுந்தர் பிச்சை சம்பளம் இத்தனை கோடியா…?

nathan

மகளோடு சேர்ந்து முனைவர் பட்டம் பெற்று சாதனைப் படைத்த அம்மா!

nathan

அடுத்தடுத்து விவாகரத்து பெறும் தனுஷின் நண்பர்கள்..

nathan

தனது twins குழந்தைகளின் முகத்தை காட்டிய சின்மயி

nathan