28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
02 1441191774 rava seedai
சிற்றுண்டி வகைகள்

ரவா சீடை: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

கிருஷ்ண ஜெயந்தி வரப்போகிறது. பலரது வீடுகளிலும் பலகாரங்களை செய்து, கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனுக்கு படைப்பார்கள். அப்படி செய்யும் பலகாரங்களில் ரவா சீடையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இது கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்ததாம். மேலும் உங்கள் வீட்டு செல்ல கிருஷ்ணனும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

சரி, இப்போது அந்த ரவா சீடையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

ரவை – 1/2 கப் பொட்டுக்கடலை – 2 1/2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் – 2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன் எள் – 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் – சிறிது (2 டீஸ்பூன்) உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ரவையை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பௌலில் ரவை, பொட்டுக்கடலை மாவு, எள், சீரகப் பொடி, மிளகுத் தூள், வதக்கிய தேங்காய், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, மென்மையாக பிசைந்து, 30-45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அடுத்து அந்த மாவை சீடை அளவில் சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக ஒரு பேப்பரில் வைத்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும். அதே சமயம் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெயானது சூடானதும், அதில் உருட்டி வைத்துள்ள சீடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ரவா சீடை ரெடி!!!

02 1441191774 rava seedai

Related posts

நேந்திரம் பழம் அப்பம்

nathan

பாலக் டோஃபு

nathan

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான வடைகறி ரெசிபி

nathan

தயிர் மசாலா இட்லி

nathan

கடலைப்பருப்பு வெல்ல போளி

nathan

சுவையான சத்தான குதிரைவாலி புலாவ்

nathan

சத்து நிறைந்த கேரட் – முந்திரி அடை

nathan

சத்தான திணை கார பொங்கல்

nathan

ஜாலர் ரொட்டி

nathan