33.4 C
Chennai
Wednesday, Jul 16, 2025
1 dosa kurma 1660392863
சமையல் குறிப்புகள்

தோசை குருமா

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி – 1 இன்ச்

* பூண்டு – 2 பல்

* பெரிய வெங்காயம் – 1/2 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* தேங்காய் – 1/2 மூடி (துருவியது)

* வரமிளகாய் – 3

* மல்லி – 1 டீஸ்பூன்

* கசகசா – 1 டீஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – 1/2 கப்

குருமாவிற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* பட்டை – 1/2 இன்ச்

* ஏலக்காய் – 3

* கறிவேப்பிலை – சிறிது

* பெரிய வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் – 1 (நீளமாக கீறியது)

* தக்காளி – 1/2 (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – 3 கப்

* கொத்தமல்லி – சிறிது1 dosa kurma 1660392863

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, அதைத் தொடர்ந்து துருவிய தேங்காய், 3 வரமிளகாய், மல்லி விதைகள், கசகசா, சோம்பு மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு 1/2 கப் நீரை ஊற்றி நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, மஞ்ச தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் 3 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, மேலே கொத்தமல்லியை தூவி கிளறினால், தோசை குருமா தயார்.

Related posts

சுவையான அவல் பால் கொழுக்கட்டை

nathan

சுவையான சிக்கன் ஸ்ட்ரிப்ஸ்

nathan

பன்னீரில் இட்லி செய்தால் அதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா?

nathan

முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு

nathan

தக்காளி பியூரியை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?

nathan

புதினா பன்னீர் கிரேவி

nathan

paneer recipe – பன்னீர் கிரேவி

nathan

உடுப்பி சாம்பார்

nathan

சூப்பரான அவல் பாயாசம் செய்வது எப்படி?

nathan