26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
2 brinjal gravy 1661336493
சமையல் குறிப்புகள்

சுவையான பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி

தேவையான பொருட்கள்:

* பெரிய கத்திரிக்காய் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 4 (நறுக்கியது)

* வெங்காயம் – 2 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* புளி – 20 கிராம் (சுடுநீரில் ஊற வைத்தது)

* கடுகு – 1 டீஸ்பூன்

* மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

* நாட்டுச் சர்க்கரை – 1/2 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது2 brinjal gravy 1661336493

செய்முறை:

* முதலில் புளியை சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்து, நன்கு பிசைந்து 1/24 கப் சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு வெங்காயத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அதே மிக்சர் ஜாரில் தக்காளியைப் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கத்திரிக்காயை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். கத்திரிக்காயின் தோல் ப்ரௌன் நிறத்தில் மாறியதும், அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Bengaluru Style Brinjal Gravy Recipe In Tamil
* பின் அதே வாணலியில் மீண்டும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அரைத்த தக்காளி, புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் குறைவான தீயில் நன்கு வேக வைக்க வேண்டும்.

* பிறகு மூடியைத் திறந்து, அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, கத்திரிக்காயை நன்கு வேக வைக்க வேண்டும். கத்திரிக்காய் நன்கு வெந்ததும் இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி தயார்.

Related posts

சூப்பரான கார்ன் இட்லி

nathan

சுவையான காளான் சீஸ் சாண்ட்விச்

nathan

வேப்பம் பூவை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள் அதிக நன்மை கிடைக்கும்!..

sangika

சுவையான மாங்காய் புலாவ்

nathan

சுவையான தயிர் கொண்டைக்கடலை சப்ஜி

nathan

சுவையான சிவப்பு காராமணி குழம்பு

nathan

சுவையான மிளகு வடை ரெடி….

sangika

மெத்தி சிக்கன் குழம்பு

nathan

பன்னீர் சீஸ் டோஸ்ட்

nathan