கோடையில் விலை குறைவில் கிடைக்கும் பழம் தான் மாம்பழம். இந்த மாம்பழம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட. அத்தகைய மாம்பழத்தை எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை மாலை வேளையில் லஸ்ஸி போன்று செய்து குடித்தால் அருமையாக இருக்கும்.
இங்கு மாம்பழ லஸ்ஸியை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மாம்பழம் – 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது) கெட்டி தயிர் – 1/2 கப் சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1/4 கப் ஐஸ் கட்டிகள் – சிறிது நட்ஸ் – சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் மிக்ஸியில் மாம்பழத் துண்டுகள், தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் லஸ்ஸி சற்று கெட்டியாக இருந்தால், அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இனிப்பு வேண்டுமானால் சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்து, டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டி சேர்த்து, மேலே நட்ஸ்களைத் தூவி பரிமாறினால், மாம்பழ லஸ்ஸி ரெடி!!!