25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 chinese ginger garlic chicken 1666778777
அசைவ வகைகள்

ஜிஞ்சர் கார்லிக் சிக்கன்

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

* பூண்டு – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* எள்ளு விதைகள் – 2 டீஸ்பூன்

ஊற வைப்பதற்கு…

* சிக்கன் நெஞ்சுக்கறி – சிறிது (சிறு துண்டுகளாக்கப்பட்டது)

* ஒயிட் பெப்பர் பவுடர் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – 1 டேபிள் ஸ்பூன்

* சோள மாவு – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சோள மாவு – 4 டேபிள் ஸ்பூன்

சாஸ் செய்வதற்கு…

* சிக்கன் ஸ்டாக்/சிக்கன் வேக வைத்த நீர் -1 கப்

* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* ரைஸ் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்

* சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

* சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – 3 டேபிள் ஸ்பூன்2 chinese ginger garlic chicken 1666778777

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனில் உப்பு, மிளகுத் தூள், எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் சோளா மாவு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் ஒரு சிறிய பௌலில் சிக்கன் ஸ்டாக், சோயா சாஸ், வினிகர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, அதை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

Chinese Ginger Garlic Chicken Recipe In Tamil
* எண்ணெய் சூடாவதற்குள், ஊற வைத்துள்ள சிக்கனில் 4 டேபிள் ஸ்பூன் சோளமாவை சேர்த்து நன்கு கிளறி, பின் அதை எண்ணெயில் போட்டு 30 நொடிகள் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் பொரித்த சிக்கனை எண்ணெயில் போட்டு 30-45 நொடிகள் பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவில் 3 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து 30 நொடிகள் நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தனியாக கலந்து வைத்துள்ள சாஸை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அதில் வறுத்த சிக்கன் மற்றும் கலந்து வைத்துள்ள சோள மாவு நீரை சேர்த்து நன்கு சுண்ட வறுத்து இறக்கி, மேலே வெள்ளை எள்ளு விதைகளைத் தூவினால், சுவையான சைனீஸ் ஸ்டைல் ஜிஞ்சர் கார்லிக் சிக்கன் தயார்.

Related posts

வறுத்த கோழி குழம்பு

nathan

முட்டை பிரியாணி செய்வது எப்படி

nathan

சூப்பர் ஆட்டுக்கால் மிளகு குழம்பு : செய்முறைகளுடன்…!

nathan

சுவையான மட்டன் சொதி செய்வது எப்படி

nathan

காரசாரமான மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி

nathan

சுறா புட்டு செய்ய…!

nathan

மிளகு சிக்கன் குழம்பு

nathan

காரசாரமான ஆட்டு மூளை மசாலா

nathan

மீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்ன தெரியுமா?….

sangika