என்னென்ன தேவை?
சிக்கன் – 300 கிராம்
கடலை மாவு -2கப்
அரிசி மாவு -2ஸ்பூன்
வேகவைத்த உருளைக்கிழங்கு
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1
இஞ்சி,பூண்டு விழுது -1ஸ்பூன்
பட்டை -4
சீரகம் -2ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் -4ஸ்பூன்
கரம் மசாலா -1/2ஸ்பூன்
சீரகத்தூள் -1ஸ்பூன்
மிளகுத்தூள் -1/4ஸ்பூன்
தேவையான அளவு:
கறிவேப்பிலை, புதினா
கொத்தமல்லி, உப்பு
எண்ணெய்
எப்படி செய்வது?
எலும்பு இல்லாத சிக்கனை எடுத்து மிக்ஸிரில் போட்டு அரைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் கலந்து கிளறி கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுபொடி கலந்து கிளறி, அரைத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து சுருளாக வதக்கி தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சிக்கனில் கலந்து போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும். கொத்தமல்லி இலையை போட்டு கிளறி ஆற வைக்கவும்.
பின்னர் இரண்டு கப் கடலைமாவு, 2ஸ்பூன் அரிசி, உப்பு, 3 ஸ்பூன் மிளகாய்தூள், சேர்த்து தண்ணீர் கலந்து கெட்டியான மாவாக தயார் செய்ய வேண்டும். சிக்கனை போண்டா வடிவத்தில் பிடித்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைமாவில் மூழ்கவைத்து பொரித்து எடுத்தால் சூடான சிக்கன் போண்டா தயார்.