25.4 C
Chennai
Tuesday, Dec 24, 2024
2 paneer pizza 1670675441
சமையல் குறிப்புகள்

சுவையான பன்னீர் பிட்சா

தேவையான பொருட்கள்:

பிட்சா பேஸிற்கு…

* கோதுமை மாவு – 1 1/4 கப்

* இன்ஸ்டன்ட் ஈஸ்ட் – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 1/4 கப் + 1/4 கப்

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

* உப்பு – 1/2 டீஸ்பூன்

* ஆலிவ் ஆயில் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

டாப்பிங்கிற்கு…

* பன்னீர் – 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்

* தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்

* மொசரெல்லா சீஸ் – 3/4 கப் (துருவியது)

* ஆரிகனோ – 1/4 டீஸ்பூன்

* குடைமிளகாய் – 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* பிட்சா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம்- 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

அலங்கரிக்க…

* ஆரிகனோ – தேவையான அளவு

* சில்லி ப்ளேக்ஸ் – தேவையான அளவு2 paneer pizza 1670675441

செய்முறை:

* முதலில் 1/4 கப் வெதுவெதுப்பான நீரில், சர்க்கரை, இன்ஸ்டன்ட் ஈஸ்ட், எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் கோதுமை மாவை சேர்த்து கலந்து, மீதமுள்ள 1/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு அதை ஒரு பாத்திரத்தில் வைத்து, மூடி வைத்து 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைக்கும் போது மாவு நன்கு உப்பி வந்திருக்கும்.

* பின்பு பிசைந்த மாவை இரண்டாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

* அதில் ஒரு பகுதியை எடுத்து பிட்சாவின் மெல்லிய பேஸாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு ஃபோர்க்கை எடுத்து பேஸில் ஆங்காங்கு துளையிட வேண்டும்.

* பின்பு ஓவனை 10 நிமிடத்திற்கு 150 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

Paneer Pizza Recipe In Tamil
* பின்பு ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அதில் தக்காளி சாஸ், மிளகுத் தூள், ஆரிகனோ ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி பின் லேசாக மாவைத் தூவி, தேய்த்து வைத்துள்ள பிட்சா பேஸை அதில் வைத்து, பின் ட்ரேயை ஓவனில் 7-9 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

* பிட்சா பேஸ் தயாரான பின்னர், அதன் மேல் சிறிது பாலைத் தடவி, பின் அதன் மேல் பிட்சா சாஸை தடவ வேண்டும். பின் ஓவனை 10 நிமிடத்திற்கு 200 டிகிரி செல்சியஸிற்கு சூடேற்ற வேண்டும்.

* பின்பு அந்த பிட்சா பேஸ் மேலே துருவிய சீஸை தூவ வேண்டும். அதன் பின் வெங்காயம், குடைமிளகாய் மற்றும் பன்னீர் துண்டுகளை மேலே வைத்து, மீதமுள்ள சீஸை தூவ வேண்டும்.

* பின் அந்த பிட்சாவை ஓவனில் 5 நிமிடம் வைத்து எடுத்தால், சுவையான பன்னீர் பிட்சா தயார். அதன் மேல் ஆரிகனோ மற்றும் சில்லி ப்ளேக்ஸ் தூவி பரிமாறுங்கள்.

Related posts

செட்டிநாடு பட்டாணி குருமா

nathan

சுவையான மைசூர் போண்டா….

sangika

முட்டைக்கு பதிலாக சேர்க்கக்கூடிய பவுடர் கிடைக்கிறதாமே?

nathan

மட்டன் சிக்கன் மசாலா பவுடர்

nathan

காலிஃப்ளவர் குருமா!

nathan

முந்திரி சிக்கன்

nathan

எளிய முறையில் வடகறி ரெசிபி

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால்

nathan

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan