25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 1434956928 1 surya
ஆரோக்கியம் குறிப்புகள்

தமிழ் நடிகர் நடிகைகளின் ஃபிட்னஸ் ரகசியம்!!!

பலரும் நடிகர் நடிகைகளைப் பார்த்து தான் தங்களின் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வோம். அதில் நடிகர்களைப் பார்த்து ஆண்கள் மட்டுமின்றி, நடிகைகளைப் பார்த்து பெண்களும் தங்களின் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகின்றனர். அப்படி தமிழில் பல நடிகர், நடிகைகள் ஒருசில டயட்டை அன்றாடம் மேற்கொண்டு, தங்களின் உடலமைப்பை கட்டுக்கோப்புடன் பராமரித்து வருகின்றனர்.

இங்கு அப்படி தங்களின் உடலை கட்டுக்கோப்புடன் பராமரித்து வரும் சில நடிகர், நடிகைகளின் டயட் மற்றும் ஃபிட்னஸ் ரகசிங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சூர்யா

தமிழில் பிட்டான உடலை வைத்திருக்கும் நடிகர் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நிச்சயம் நடிகர் சூர்யாவாகத் தான் இருக்கும். அதிலும் வாரணம் ஆயிரம் படத்தில் அவர் வைத்திருந்த உடலமைப்பால் பல ரசிகர்களை அவர் கவர்ந்தார். மேலும் சூர்யா ஆமீர் கானை கஜினி சூட்டிங்கின் போது சந்தித்து, ஆலோசனை பெற்று, பின் அல்காஸ் ஜோசப் என்னும் பயிற்சியாளரின் உதவியால் தன் உடலை கட்டுக்கோப்புடன் பராமரித்து வந்தார்.

விஜய்

நடிகர் விஜய் இன்னும் இளமையாக காட்சியளிப்பதற்கு காரணம் என்னவென்று தெரிந்தால், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஏனெனில் அவர் எந்த ஒரு டயட்டையும் பின்பற்றுவதில்லை. மேலும் எதையும் அளவாக தான் சாப்பிடுவார். மேலும் தினமும் சிறிது நேரம் தரை பயிற்சிகள் மற்றும் எடை தூக்கும் பயிற்சியை மேற்கொள்வாராம். அதிலும் ஜிம் எதுவும் போகாமல், வீட்டிலேயே தான் மேற்கொள்வாராம்.

ஸ்ரேயா

தமிழ் நடிகைகளில் சிக்கென்ற உடலை பராமரித்து வருபவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் தன் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள டயட், உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை அன்றாடம் மேற்கொள்வாராம். அதிலும் அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளுடன், தினமும் நீச்சல், சைக்கிளிங் அல்லது பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றை அன்றாடம் தவறாமல் பின்பற்றுவாராம்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் தன் உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள தினமும், உடற்பயிற்சியுடன், காலை, மதியம், மாலை வேளையில் என்ன சாப்பிடுவதென்று ஒரு டயட் திட்டம் தீட்டி மேற்கொண்டு வருகிறாராம்.

த்ரிஷா

பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா, இன்னும் இளமையாகவும், அழகான உடலமைப்புடனும் காணப்படுவதற்கு முக்கிய காரணம் யோகாவாம். இவர் யோகா மீது முழு நம்பிக்கை கொண்டு அவற்றை தினமும் மேற்கொண்டு வருவதோடு, ஜிம்மில் 1 மணிநேரம் உடற்பயிற்சி செய்து, உண்ணும் உணவில் அதிக அக்கறை கொண்டு அவற்றில் கட்டுப்பாட்டுடன் இருப்பாராம்.

இலியானா

கோலிவுட் முதல் பாலிவுட் வரை மிகவும் பிரபலமான ஒரு முகம் தான் இலியானா. மேலும் இவர் என்ன தான் சாப்பிட்டாலும், அவர் குண்டாகாமல் இருப்பவது அவரது ப்ளஸ் எனலாம். ஏனெனில் இவர் நன்கு சாப்பிடுவாராம். அதுமட்டுமின்றி தினமும் உடற்பயிற்சியுடன், நீச்சலையும் தவறாமல் மேற்கொள்வதால் தான், அவர் இன்னும் சிக்கென்று இருப்பதற்கான ரகசியமாம்.

நயன்தாரா

ஆரம்பத்தில் குண்டாக இருந்த நயன்தாரா, பின் தன் உடலமைப்பை சிக்கென்று மாற்ற உடற்பயிற்சியாளர் ஒருவரின் உதவியை நாடினாராம். மேலும், தற்போது அளவாக உணவை உட்கொள்வதோடு, தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறாராம். அதுமட்டுமின்றி, இவரும் யோகாவை அன்றாடம் செய்து வருவதோடு, தினமும் 8 மணிநேர தூக்கத்தை தவறாமல் மேற்கொள்வாராம். குறிப்பாக, பிட்டாக இருப்பதற்கு மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவதும் ஒரு ரகசியம் என்றும் கூறுகிறார்.

தமன்னா

தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்த தமன்னா, அழகான உடலமைப்பைக் கொண்டதோடு, மேக்கப் போடாமலேயே அழகாக காணப்படுபவரும் கூட. இவர் இப்படி சிக்கென்று இருப்பதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பதோடு, வேக வைத்த உணவுகளைத் தான் தேர்ந்தெடுத்து சாப்பிடுவாராம். மேலும் இவர் தினமும் உடற்பயிற்சியை செய்வதோடு, நீச்சல் பயிற்சியை தவறாமல் செய்து வருவாராம்.

அனுஷ்கா

நடிகை அனுஷ்கா ஒரு யோகா மாஸ்டர். இவரது உயரத்திற்கு ஏற்ற பிட்டான உடலுக்கு யோகாவையே காரணமாக சொல்லலாம். அதுமட்டுமின்றி, இவர் ஸ்நாக்ஸ் நேரத்தில் பழங்களைத் தான் தேர்ந்தெடுத்து சாப்பிடுவாராம்.

சோனு சூட்

பல படங்களில் அழகான வில்லனாக வரும் சோனு சூட் கூட அற்புதமான உடற்கட்டைக் கொண்டவர். இவருக்கு எப்போதும் சிக்ஸ் பேக் இருப்பதற்கு, அன்றாடம் சரிவிகித உணவை உட்கொள்வதோடு, உடற்பயிற்சியை செய்து, ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களான சிகரெட், மது, ஜங்க் உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பாராம்.

22 1434956928 1 surya

Related posts

கர்ப்பிணிகளே! குழந்தை அறிவாளியா பிறக்கணுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தையின் பிறப்பு மற்றும் வளர்ப்பில் தந்தையின் பங்கு மிக முக்கியமானதா?

nathan

உங்களுக்கு தெரியுமா தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் பெறும் நன்மைகள்!!!

nathan

அதிகாலையில் எழுந்ததும் கட்டாயம் செய்ய வேண்டியவை…

nathan

வெயிலுக்கு குளுகுளு டிப்ஸ்

nathan

பெண்கள் திருமண மோதிரத்தை இடது கையில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்

nathan

இந்த 5 ராசிக்காரங்க விஷத்தை விட ஆபத்தானவங்க…

nathan

குடல்வால் பிரச்சினை மற்றும் குடல் வீக்கத்தை கட்டுப்படுத்த!….

sangika

செய்வினை மற்றும் திருஷ்டி கழிக்க ஏன் எலுமிச்சை பயன்படுத்துகிறார்கள்?

nathan