24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
21 1440160794 dahi papdi recipe
சிற்றுண்டி வகைகள்

தஹி பப்டி சாட்

தற்போதைய குழந்தைகள் சாட் ரெசிபிக்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படி கடைகளில் சாட் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே சாட் ரெசிபிக்களை செய்து கொடுத்தால், அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.

இங்கு சாட் ரெசிபிக்களில் ஒன்றான தஹி பப்டி சாட் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

: பப்டி/சின்ன தட்டுவடை – 12-14 இனிப்பு சட்னி – 1 டேபிள் ஸ்பூன் கெட்டியான தயிர் – 1 கப் வேக வைத்த உருளைக்கிழங்கு – 1 (மசித்தது) வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது) ஓமப்பொடி – 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் சாட் மசாலா – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு சர்க்கரை – 1 டீஸ்பூன்

இனிப்பு சட்னிக்கு…

பேரிச்சம் பழம் – 8 (விதை நீக்கியது) புளி – சிறு நெல்லிக்காய் அளவு வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பேரிச்சம் பழம் மற்றும் புளியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு புளியில் உள்ள நார் மற்றும் விதையை நீக்கிவிட்டு, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பேரிச்சம் பழம் சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் வெல்லம், சீரகப் பொடி, மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் தயிரில் சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு தட்டில் தட்டுவடைகளை வைத்து, அதன் மேல் சிறிது மசித்த உருளைக்கிழங்கு வைத்து, மேலே சிறிது வெங்காயத்தை வைத்து, மேலே சிறிது தயிரை ஊற்றி, உப்பு தூவி, இனிப்பு சட்னியை ஊற்ற வேண்டும். பின் அதன் மேல் மிளகாய் தூள், சாட் மசாலா பொடி, ஓமப்பொடி, கொத்தமல்லி தூவினால், தஹி பப்டி சாட் ரெடி!!!

21 1440160794 dahi papdi recipe

Related posts

மாலை நேர சிற்றுண்டி மசாலா இடியாப்பம்

nathan

ஸ்டஃப்டு குடை மிளகாய்

nathan

சத்தான சுவையான கோதுமை உசிலி

nathan

தேங்காய்ப்பால் காலிஃப்ளவர் சப்ஜி

nathan

சுவையான சத்தான கோதுமை இடியாப்பம்

nathan

எள் உருண்டை :

nathan

அவல் – பொட்டேட்டோ மிக்ஸ்

nathan

ஃபலாஃபெல்

nathan

நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி வடை

nathan