28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
27 pastarecipe
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான கோதுமை பாஸ்தா

நூடுல்ஸ் போன்றே, பாஸ்தாவும் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. பொதுவாக இதனை மாலையில் ஸ்நாக்ஸ் போன்று தான் சாப்பிடுவார்கள் என்று அனைவரும் நினைக்கிறோம். ஆனால் உண்மையில், இது ஒரு சூப்பரான காலை உணவும் கூட. இத்தகைய பாஸ்தாவை சிலருக்கு எப்படி செய்வதென்று தெரியாமல், வெறும் தக்காளி, மற்றும் வெங்காயத்தை வதக்கி போட்டு செய்வார்கள்.

ஆனால் பாஸ்தாவை அருமையான சுவையில் எளிதாக செய்யலாம். இப்போது அந்த பாஸ்தாவை எப்படி செய்தென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். #tamilrecipes

தேவையான பொருட்கள்:

கோதுமை பாஸ்தா – 1 1/2 கப் தண்ணீர் – 3 கப் வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது) தக்காளி – 1/4 கப் (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது) கரம் மசாலா – 1/4 டேபிள் ஸ்பூன் மைதா – 1 டேபிள் ஸ்பூன் பால் – 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் அதில் பாஸ்தாவைப் போட்டு, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். 10 நிமிடம் ஆனதும், அதனை இறக்கி, அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, மீண்டும் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு சிறிது நேரம் கிளறி விட வேண்டும். பிறகு மைதா சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட்டு, பால், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் பிரட்டி விட வேண்டும். வாணலியில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்ததும், வேக வைத்துள்ள பாஸ்தாவைப் போட்டு, பாஸ்தாவில் மசாலா நன்கு ஒன்று சேருமாறு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சூப்பரான கோதுமை பாஸ்தா ரெடி!!!

27 pastarecipe

Related posts

ஜிலேபி,

nathan

கிளப் சாண்ட்விச் பரோட்டா எப்படிச் செய்வது?

nathan

ஹராபாரா கபாப்

nathan

வாழைப்பூ பச்சடி

nathan

சுவையான மைசூர் போண்டா….

sangika

தக்காளி பஜ்ஜி

nathan

குழந்தைகளுக்கு சத்துநிறைந்த ராகி கொழுக்கட்டை

nathan

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் எள் நூடுல்ஸ் எப்படி ஆரோக்கியமாக தயாரிக்கலாம் என தெரியுமா உங்களுக்கு?

nathan

சம்பா கோதுமை பணியாரம்

nathan