25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
palak tofu 22 1461323591
சைவம்

பாலக் டோஃபு கிரேவி

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தியா? அதற்கு வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியெனில் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பசலைக்கீரை மற்றும் புரோட்டீன், கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபு கொண்டு கிரேவி செய்யுங்கள். இது அற்புதமாக இருக்கும்.

சரி, இப்போது அந்த பாலக் டோஃபு கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பட்டை – 3 துண்டு பிரியாணி இலை – 1 வெங்காயம் – 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது) மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 2 டீஸ்பூன் டோஃபு – 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது) தண்ணீர் – தேவையான அளவு பால் – 1/2 கப் சோள மாவு – 1 டீஸ்பூன்

பசலைக்கீரை சமைப்பதற்கு…

பசலைக்கீரை/பாலக் – 4 கப் (நறுக்கியது) பூண்டு – 2 பற்கள் பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது) தண்ணீர் – 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பசலைக்கீரை, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 5-7 நிமிடம் நன்கு கீரையை வேக வைக்க வேண்டும். பின் அதனை இறக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் மசாலா பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி, அரைத்து வைத்துள்ள கீரை கலவையை ஊற்றி, கிரேவி அதிகம் வேண்டுமானால் தண்ணீர் சிறிது ஊற்றி, உப்பு சேர்த்து, மிதமான தீயில் 5-8 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். இறுதியில் அதில் டோஃபு சேர்த்து குறைவான தீயில் சில நிமிடங்கள் வேக வைக்கவும். அடுத்து பாலில் சோள மாவு சேர்த்து கலந்து, கிரேவியுடன் சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், பாலக் டோஃபு ரெடி!!!

palak tofu 22 1461323591

Related posts

வெண்டை மொச்சை மண்டி

nathan

மீல் மேக்கர் கிரேவி செய்முறை விளக்கம்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான காரமான காளான் மஞ்சூரியன்

nathan

சைனீஸ் ஃபிரைடு ரைஸ்

nathan

மிளகு மோர்க்குழம்பு செய்வது எப்படி

nathan

சூப்பரான கேழ்வரகு சேமியா வெஜிடபிள் பிரியாணி

nathan

காரசாரமான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி

nathan

முருங்கைக்காய் அவியல்

nathan

பர்கரை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா?

nathan