சைவம்

முள்ளங்கி பருப்பு கறி

தேவையான பொருள்கள்:
முள்ளங்கி – 1/2 கிலோ
பயத்தம் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்,
கடுகு,
உளுத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு,
சீரகம்,
பெருங்காயம்.
செய்முறை:
• பயத்தம் பருப்பைக் கழுவி, நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
• முள்ளங்கியை தோலைச் எடுத்து விட்டு கேரட் துருவியில் பெரிய அளவாகத் துருவிக் கொள்ளவும்.
• துருவிய முள்ளங்கியுடன் நீரை வடித்த பயத்தம் பருப்பு, உப்பு சேர்த்துப் பிசிறி பத்து நிமிடங்கள் வைக்கவும்.
• அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
• கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, முள்ளங்கிக் கலவையையும் சேர்த்துக் கிளறி, மூடிவைக்கவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
• ஒன்றிரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து கிளறிவிட்டு, முள்ளங்கி வெந்து நீர்வற்றியதும் தேங்காய்த் துருவல், நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். (சுமார் 5, 6 நிமிடங்களிலேயே முடிந்துவிடும்.)
• நீர்சத்து நிறைந்தது முள்ளங்கி. சிறுநீர் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் முள்ளங்கியை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF %E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 %E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button