தேவையான பொருட்கள் :
இறால் 500 கிராம்
வெங்காயம் -1
பச்சை மிளகாய் 3
இஞ்சி -1 துண்டு
பூண்டு-5 பல்
முட்டை-1
சோள மா–1 கரண்டி
மஞ்சள் தூள் -1/4 கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் -1 கரண்டி
செய்முறை :
பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி லைட்டாக அதாவது ஒரு வேக்காடு வேகவைக்க வேண்டும்.
அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டிவிடவும். வடிகட்டிய இறாலை மிகவும் சிறியதாக பொடிபொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும்.
காரத்திற்கு கரம் மசாலா அரை கரண்டி, சாட் மசாலா அரை கரண்டி, கறுப்பு மிளகு அரை கரண்டி சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
அதில் பிரெட் தூள் 2 கரண்டி, சோள மா, தேவையான அளவு உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக வடை செய்கிற மாதிரி செய்து நடுவில் முந்திரி பருப்பு வைத்து பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி 3-5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால்….
சுவையான பச்சை இறால் வறுவல் தயார்.