கால்களுக்கு நல்ல வலிமையை தரும் ஆசனம் இது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் பலன் பெறலாம்.
கால்களுக்கு வலிமை தரும் நாவாசனம்
செய்முறை :
முதலில் விரிப்பில் கால்களை நீட்டி நிமிர்ந்து உட்காரவும். பின்னர் முழங்கால்களை வளைக்காமல் கால்களை மேலே தூக்குங்கள். உங்கள் கால்களை மெதுவாக ஒரு 45 டிகிரி கோணத்திற்கு நேராக செல்ல வேண்டும். முதுகெலும்பு சரிவு விடாமல், கால்கள் தூக்கி “V” வடிவத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
உங்கள் கைகளை தோல் பட்டை வரை (கால்களுக்கு நேராக) நீட்ட வேண்டும். உங்கள் எடை முழுவதும் சமநிலையில் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். இயல்பான சுவாசத்தில் 10 வினாடிகள் இருந்து பின்னர் பழைய நிலைக்கு வரவும். இந்த ஆரம்பத்தில் இந்த ஆசனத்தை 2 முறை செய்யலாம். பின்னர் படிப்படியாக அதிகரித்து 4 முதல் 6 முறை செய்யலாம்.
பயன்கள் :
அடி வயிறு நன்கு கசக்கப்படுகிறது. வயிற்றினுள் உள்ள உறுப்புகள் சுத்தமாவதுடன் புதிய உத்வேகம் பெறும். இதயம் பலமாகும். கால்களில் உள்ள வலிகள் அகன்று பலம் பெறும். மூல வியாதிகள் அகலும். கால்களுக்கு நல்ல வலிமையை தரும்.