31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

கொட்டும் மழையில் குட்டியை காப்பாற்ற ஓடிய தாய் நாய்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் கடல் போல் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. பெரும்பாலான சாலைகள் இடுப்பளவு மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் நலன் கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

மீட்புப் பணிகளில் தமிழக அரசும் பங்கேற்றது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பல வீடியோக்களை இணையத்தில் பார்த்திருக்கிறோம். குறிப்பாக சென்னையில் பள்ளிக்கரணையில் அதிக சேதம் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதே போன்று வேளச்சேரியில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் கண்கலங்க செய்தது. அதில் தாய் நாய் ஒன்று மழையில் நனைந்த படி வெள்ளநீரில் கடும் சிரமப்பட்டு தன் குட்டியை வாயில் கவ்விய படி தூக்கி சென்றது. அம்மா என்றாலே அரவணைப்பு என்று தெரியும். இது அனைத்து ஜீவராசிகளுக்கும் சமம் என அவ்வபோது இது போன்ற சம்பவங்கள் நிரூபித்து வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

தோழிகளுடன் ஆட்டம் போட்ட ஈரமான ரோஜாவே சீரியல் காவ்யா

nathan

லண்டனை கலக்கும் தமிழ்பெண்! சாதித்தது எப்படி?

nathan

குழந்தைகளுக்கும் பிரியாணியில் விஷம் கலந்து கொடுத்து தற்கொலை செய்து கொண்ட கணவர்

nathan

பயங்கரவாதம் ஒழியும்வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும்

nathan

குடும்பத்துடன் ஜெயிலர் படம் பார்த்த நடிகை ஷாலினி- வீடியோவுடன் இதோ

nathan

ஆடி மாதம் – புதுமண தம்பதிகள் கட்டாயம் பிரிய வேண்டுமா?

nathan

ராகவா லாரன்ஸை அறிமுகப்படுத்திய இயக்குனர் மரணம்

nathan

இறுக்கமான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!!

nathan

70க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளுடன் 100வது பிறந்தநாள் கொண்டாடிய தம்பதி!

nathan