24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
zo1l7EJ3DW
Other News

கொட்டும் மழையில் குட்டியை காப்பாற்ற ஓடிய தாய் நாய்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் கடல் போல் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. பெரும்பாலான சாலைகள் இடுப்பளவு மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் நலன் கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

மீட்புப் பணிகளில் தமிழக அரசும் பங்கேற்றது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பல வீடியோக்களை இணையத்தில் பார்த்திருக்கிறோம். குறிப்பாக சென்னையில் பள்ளிக்கரணையில் அதிக சேதம் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதே போன்று வேளச்சேரியில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் கண்கலங்க செய்தது. அதில் தாய் நாய் ஒன்று மழையில் நனைந்த படி வெள்ளநீரில் கடும் சிரமப்பட்டு தன் குட்டியை வாயில் கவ்விய படி தூக்கி சென்றது. அம்மா என்றாலே அரவணைப்பு என்று தெரியும். இது அனைத்து ஜீவராசிகளுக்கும் சமம் என அவ்வபோது இது போன்ற சம்பவங்கள் நிரூபித்து வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

நிறை மாதத்தில் டான்ஸ் ஆடிய அமலாபால்

nathan

தனுஷ் மீனா திருமணம் குறித்து நடிகர் ரங்கநாதன்

nathan

பின்பக்கம் கழண்டு வந்த புடவை.. இது தான் Fashion-ஆம்..

nathan

பிக்பாஸ் மூலம் தெரிய வந்த உண்மை..!சோகங்கள் நிறைந்த வினுஷா தேவி வாழ்க்கை..

nathan

அடிச்சு தூக்கும் தங்கம் விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி.!

nathan

விவசாயம் செய்யும் நடிகர் அருண் பாண்டியன் மகள்

nathan

CODING போட்டியில் வென்ற 15 வயது மாணவன்

nathan

பிரபல நடிகர் ஜுனியர் பாலையா மரணம்

nathan

கேப்டன் விஜயகாந்தின் அப்பா அம்மா புகைப்படங்கள் ………

nathan