24.5 C
Chennai
Thursday, Dec 26, 2024
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

புறந்தள்ளும் காய்கறிகளில் உண்டு எல்லையற்ற பலன்கள்

Tamil-Daily-News_14374506474இன்றைய நவீன உலகில், உணவு கூட சத்தின்றி மாறியுள்ளது. இதனாலேயே பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது. இதில், பெரும்பானவர்களுக்கு உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனாலேயே பல டாக்டர்கள், காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்க்க வலியுறுத்துகின்றனர். ஆனாலும், பலரும் சத்தில்லாத காய்கறிகளை மட்டுமே உணவில் சேர்க்கின்றனரே தவிர, சத்தான காய்கறிகளை புறந்தள்ளி விடுகின்றனர். நாம் புறம்தள்ளும் காய்கறிகளில், சத்துகள் மட்டுமல்ல; பல நோய்களுக்கு மருத்துவ சக்தியும் உள்ளது. அந்த வகையில், சில காய்கறிகளும் அதில் உள்ள குணங்களும்:

கத்திரிக்காய்

பொதுவாக கத்திரிக்காய் என்றாலே பலருக்கு பிடிப்பதில்லை. சிலருக்கு இது எட்டி காயாக கூட இருக்கலாம். ஆனால், இதில் அரிய குணங்கள் இருப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை தரம் பிரித்து உண்பதிலும் கவனம் இருப்பது அவசியம் கத்திரிக்காயில் பல வண்ணங்கள் உண்டு, என்றாலும் அனைத்திலும் உள்ள சத்துக்கள் ஒன்றுதான். பிஞ்சு கத்திரிக்காய் சமைப்பதற்கு ஏற்றது. முற்றின கத்திரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி, சிரங்கை ஏற்படுத்தும். இதில், தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தரும் வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால், வாயு, பித்தம், கபம் போகும். அதனால்தான், பத்தியத்துக்கு இக்காயை பயன்படுத்துகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அவரைக்காய்

அவரையிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரை பிஞ்சு நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இது சூட்டுடம்புக்கு மிகவும் ஏற்றது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் உகந்தது. மேலும், இதில் உள்ள நார் சத்து உடலை வலுவாக்கும் என்பதுடன், அதிக எடை உள்ளவர்கள் இதை உட்கொண்டால், உடம்பு இளைக்கவும் உறுதுணை புரியும்.

வெண்டைக்காய்

பொதுவாக வெண்டைக்காயை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால், இதன் சுபாவம் குளிர்ச்சி தருவது. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலை பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி உயிர்சத்துக்கள் உள்ளன. இதை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டை தணிக்கும். உஷ்ண இருமலை குணமாக்கும். வெண்டைக்காய் விந்துவை கட்டி போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டை பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினமும் வெறும் வயிற்றில் உண்டால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்படும். உடம்பில் வாயு உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தும் என்பதில் கவனம் தேவை.

புடலங்காய்

நீர் சத்து மிகுந்த காய்களில் இதுவும் ஒன்று. சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அலைச்சலை போக்கும். தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தை போக்கும். வயிற்று பொருமல், வயிற்று பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.

கொத்தவரங்காய்

சிறுநீரகத்தை பெருக்கும் தன்மை கொண்டது. இது சூடு தன்மை கொண்டது. இதை தொடர்ந்து உண்டால் சீதம் போக வாய்ப்புண்டு. இது பித்தவாத கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உகந்தது அல்ல. இதன் கெட்ட குணங்களை போக்க இத்துடன் தேங்காய் பருப்பு, இஞ்சி, சீரகம் சேர்த்து சமைக்க வேண்டும்.

வாழைத்தண்டு

வாழையை பொறுத்தவரை அடி முதல் நுனி வரை அனைத்தும் மக்களுக்கு பயன்தரக்கூடியது. அதிலும், வாழைத்தண்டு மக்களுக்கு மிகவும் உகந்தது. இதில், நார் சத்து அதிகளவில் உள்ளது. பித்தத்தை தணிக்க கூடியது. சூடு ஏற்படுத்தும் தன்மை இதற்கு உண்டு என்றாலும், சிறுநீரை பெருக்கும். வாழைத்தண்டு பச்சடி உடம்பின் உஷ்ணத்தை போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றை தணிக்கும். கபத்தை நீக்கும். இதை உண்டால் குடலில் சிக்கிய முடி, தோல், நஞ்சு ஆகியவை நீங்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது இதை உண்ணுவது நல்லது.

தேங்காய்

உப்பு இல்லாத பண்டம் குப்பையிலேயே என்பதை போல், தேங்காய் இல்லாத சமையலும் சுவைக்காது. கேரள மக்கள் உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ளும் தேங்காயில் பல நன்மைகள் உண்டு. தமிழகத்தில் கூட சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில், ஏ, பி வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால், தாது விளையும். தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூட்டை மாற்றும்.

சுரைக்காய்

உடல் சூட்டை தணிப்பதுடன், குளிர்ச்சி தன்மை கொண்டது. இது சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. உடலை உரமாக்கும். மலச்சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால், பித்த வாயுவை உண்டுபண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால், அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தை போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும் இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மை இழந்தவர்கள், திரும்ப பெறுவர்.

Related posts

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்

nathan

தினமும் குங்குமப்பூ நீர் குடிங்க, அப்புறம் பாருங்க என்னலாம் நடக்குதுன்னு..!

nathan

குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா?

nathan

அகமும் சார்ந்ததே அழகு!

nathan

புரிந்து கொள்ள முடியாத பெண்களின் விசித்திர நடவடிக்கைககள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

வெல்லத்தை உணவில் சேர்த்தால் என்னென்ன மாற்றங்களை கொண்டுவரும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கணித அறிவு அதிகரிக்க குழந்தைகளுக்கு எதை தரக் கூடாது தெரியுமா?

nathan

மனித உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைக்கும் உணவுகள்

nathan