இத்தாலியின் சிசிலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.
இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன.
ஷமிலா பெர்னாண்டோ (வயது 35) என்பவரின் சடலமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் மனைவி ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளதாகவும் சகோதரர்கள் இருவரும் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.