உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.
இந்நிலையில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை அடுத்து இந்திய வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். முகமது சிராஜ், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலர் கதறி அழுத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.