திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மணமக்களுக்கு திருமண புகைப்பட ஆல்பம் வழங்கப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்த பிறகு மனித உழைப்பு குறைந்துள்ளது என்றே கூறலாம்.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம்.
இதனால், சேலம் மாவட்டம், ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மோகனசுந்தரம் – ப்ரீத்தி திருமணத்தை, பல நுட்பங்களை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தனர். அப்போது கார்னிவல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து வந்தது.
இதில் திருமணமான இரண்டு மணி நேரத்தில் மணமக்களுக்கு திருமண புகைப்பட ஆல்பம் வழங்கப்பட்டது. இதனால் மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
மணமகனும், மணமகளும், “கல்யாணத்திற்குப் பிறகு ஆல்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி. தாலியின் போது என் முகம் எப்படி இருந்தது என்று என் மனம் நினைத்துக் கொண்டிருந்தது. இப்போது அதைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி” என்றார்கள்.