medicalusesofanisecover
ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் எடை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த, செரிமான கோளாறுகளை தடுக்க உதவும் ஒரே பொருள் என்ன தெரியுமா?

நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஏராளமான வழிகள் உள்ளன. குறிப்பாக உணவுகள் அதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் நம் வீட்டில் உள்ள எளிய பொருட்கள் தான் அந்த மாயங்களைச் செய்யும். ஆனால் அதை பலரும் உணர்வதில்லை.

அதில் பால் அன்றாடம் நாம் பருகும் ஓர் பொருள். அத்தகைய பாலுடன் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடித்து வருவதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அந்த நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நல்ல தூக்கம்
இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலுடன் தேன் கலந்து குடிப்பான் மூலம், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். எப்படியெனில் தேனில் உள்ள இயற்கை சர்க்கரை மூளையை ஓய்வெடுக்கச் செய்யும். ஆகவே இரவில் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தைப் பெற வேண்டுமானால், பாலில் தேன் கலந்து குடியுங்கள்.

ஸ்டாமினா
ஒரு டம்ளர் பாலுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து காலையில் குடிப்பதால், நாள் முழுவதும் உடலின் ஸ்டாமினா தக்க வைக்கப்படும். இதற்கு பாலில் உள்ள புரோட்டீன் மற்றும் தேனில் உள்ள அத்தியாவசிய கார்போஹைட்ரேட்டுகள் தான் காரணம்.

செரிமானம்
பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் செரிமானம் மேம்படும். தேனில் உள்ள ப்ரீபயோடிக்ஸ் என்னும் ஊட்டச்சத்து, குடலில் மற்றும் செரிமான மண்டலத்தில் புரோபயோடிக் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டி, செரிமானத்தை சீராக்கும்.

மலச்சிக்கல்
நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பாலுடன் தேன் கலந்து குடித்து வர, குடலியக்கத்தின் செயல்பாடு சீராக்கப்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனை மட்டுமின்றி, வயிற்று உப்புசமும் நீங்கும்.

சுவாச நோய்கள்
வெதுவெதுப்பான பாலுடன் தேன் கலந்து குடிப்பதால், சளி, இருமல் பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். இதற்கு தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையை முக்கிய காரணமாக கூறலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம்
பாலுடன் தேன் கலந்து பருகும் போது, எலும்புகளுக்கு வேண்டிய கால்சியம் சத்தானது உடலால் அதிகம் உறிஞ்சப்படும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்பு குறையும்.

விந்தணு உற்பத்தி
ஆயுர்வேதத்தில் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க பாலும், தேனும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆகவே ஆண்கள் தினமும் வெதுவெதுப்பான பாலுடன் தேன் கலந்து குடித்து வந்தால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

வயதாவதை தாமதப்படுத்தும்
சமீபத்திய ஆய்வு ஒன்றில் பாலுடன் தேன் கலந்து குடிப்பதன் மூலம், உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் நல்லது என தெரிய வந்துள்ளது. குறிப்பாக இப்படி குடிப்பதால் வயதாகும் செயல்முறை தாமதப்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
medicalusesofanisecover

Related posts

கர்ப்பிணிகளே! குழந்தை அறிவாளியா பிறக்கணுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்கள் வீட்டில் இரவில் நாய்கள் ஊளையிட்டால் மரணமா.?

nathan

விழிப்புணர்வு பதிவு.!! மாதவிடாய் நேரத்தில் பருத்தி உறிபஞ்சுகளை உபயோகம் செய்வது நல்லதா?

nathan

இரவு நேரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் இருக்கும் ரகசியங்கள் என்ன தெரியுமா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

பதின்ம வயதில் இந்த ஐந்து ராசிக்காரர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

nathan

ஒரு கல்லை தேர்ந்தெடுங்கள்! உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்லறோம்!

nathan

மாதுளை இலையில் பல அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளதா?

nathan

கோடை விடுமுறை: செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்

nathan

காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யலாமா?

nathan