29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
BXC8c47L0v
Other News

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட மனைவி!!

கம்பஹாவில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரிதிபெல பொலிஸார் தெரிவித்தனர். ஊராபொர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குழந்தையின் தாயான கே.ஏ.சஞ்சீவனியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

இவரது கணவர் பல வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், விசாரணையில் அந்த பெண் தனது கணவரின் தாய், தந்தை மற்றும் இளைய சகோதரருடன் கணவரின் பெற்றோர் வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது.

 

 

வீட்டின் வரவேற்பறையின் நடுப்பகுதியில் சடலம் கிடப்பதைக் கண்ட மாமியார், சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் தாயாருக்கு அறிவித்ததுடன் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். பூகொட உப நீதவான் கமல் சமந்தபெரும சம்பவ இடத்திற்குச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

 

 

சடலத்தை படுபிட்டிபர வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரரை காணவில்லை எனவும் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related posts

லியோவில் ஒன்னே ஒன்னு தான் குறை: விஜய் சேதுபதி காரணமா?

nathan

பிறக்கும் போதே அதிர்ஷ்டத்துடன் பிறப்பவர்கள் யார் தெரியுமா?அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

காந்த புயல்கள்.. அலெர்ட் செய்யும் விஞ்ஞானிகள்.. பூமியில் என்ன நடக்கிறது தெரியுமா?

nathan

காதலனுடன் உல்லாசமாக இருந்த மாணவி!

nathan

பிரித்விராஜ் திருமண புகைப்படங்கள்

nathan

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள்.. விரட்டியடித்த வீரப்பெண்

nathan

மகன்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன்

nathan

மாசி அமாவாசை: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

nathan

நள்ளிரவில் குடிகாரனிடம் அடிவாங்கிய கீர்த்தி சுரேஷ்…

nathan