30.1 C
Chennai
Tuesday, Jul 14, 2026
அசைவ வகைகள்

சூப்பர் ஆட்டுக்கால் மிளகு குழம்பு : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள்:

தாளிக்க…
எண்ணெய் – 1 மே.க
பட்டை, ஏலம், கராம்பு– தலா 2
கொத்துமல்லித்தழை– ¼ கட்டு
புதினா – சிறிது

வேகவைக்க…
ஆட்டுக்கால் — ½ கிலோ
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 2 பெரியது)
பச்சை மிளகாய் – 2
மஞ்சள்தூள்– ¼ தே.க
இஞ்சி பூண்டு விழுது – – 2 தே.க
மிளகு தூள் — 1 தே.க
மிளகாய்த்தூள் – ½ தே.க
மல்லித்தூள் – 3 மே.க
தேங்காய்ப் பால் – ½ டம்ளர்
பாதாம்- எட்டு
மிளகுத்தூள்- 1 தே.க
உப்பு — தே.அ.

செய்முறை :
ஆட்டுக்காலை சுத்தமாக கழுவி தண்ணீரை வடிக்கவும். பாதாமை வெந்நீரில் ஊறவைத்து தோல் நீக்கி அரைத்து தேங்காய்ப் பாலுடன் சேர்க்கவும்.

சுத்தம் செய்த ஆட்டுக்காலுடன் வேகவைக்க தேவையான பொருட்களைச் சேர்க்கவும். ஆட்டுக்காலை அனைத்து மசாலாக்களுடனும் சேருமாறு நன்கு பிசறி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

குக்கரில் நான்கு டம்ளர் தண்ணீர் அல்லது ஆட்டுக்கால் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் உற்றி கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் குக்கர் மூடியைப் போட்டு வெயிட் போட்டு தீயை நடுத்தரமாக எரியவிடவும்.

இல்லையென்றால் குழம்பு தெறிக்கும். நான்கு அல்லது ஐந்து விசில் வரை வேகவிடவும்.

பிறகு தீயை குறைத்து (சிம்மில்) வேகவிடவும். ஆட்டுக்கால் இளசானதாக இருந்தால் 20 நிமிடத்திலும் இல்லையென்றால் 30 நிமிடத்திலும் வெந்துவிடும்.

வெந்தபிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் பாதாம் கலவையை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும். பிறகு ஒரு கரண்டி மிளகு தூள் சேர்க்கவும்.

தனியே தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து கொதித்துக் கொண்டிருக்கும் ஆட்டுக்கால் குழம்பில் சேர்த்து இறக்கவும்.

சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா, இட்லி, இடியப்பம், தோசை, அப்பம், நெய் சோறு ஆகிய அனைத்திற்கும் இதை தொட்டுக் கொள்ளலாம்.

Related posts

சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan

Chettinad chicken kulambu in tamil |செட்டிநாடு சிக்கன் குழம்பு |deepstamilkitchen

nathan

சுவையான இறால் பிரியாணி

nathan

சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு

nathan

சண்டே ஸ்பெஷல் – சிக்கன் 65,tamil samayal in tamil language,

nathan

சைடிஷ் நண்டு பொடிமாஸ்

nathan

கேரளா முட்டை அவியல்

nathan

மிகவும் சிம்பிளான சிக்கன் கிரேவி …

nathan

சண்டே ஸ்பெஷல்: ஆந்திராவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஸ்பைஸி சிக்கன்

nathan