கை கால் எரிவுக்கான -சித்த மருந்துகள்
1 . சகல நோய்க்கு நெய்
தாமரை
சிறுபூளை
வில்வம்
கோரைக்கிழங்கு
சாரணைவேர்
செங்கழுநீர்க் கிழங்கு
சீந்தில்தண்டு
கோவை
அதிமதுரம்
ஆல்
அரசு
அத்தி
இத்தி
வாகை மரங்களின் பட்டை
பனங்கிழங்கு
கற்றாழைவேர்
நாவல்
வீழி
வேம்பு வகைக்கு 1 பலம்
எடுத்து தண்ணீர்விட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.
இளநீர்
பதநீர்
கரும்புச்சாறு
நெய் ஆகியவற்றுடன்
தாளி
பொன்னாங்காணி
கோவை
நெல்லி
நீர்ப்பிரம்மி
கொடிவேலி
எலுமிச்சம்பழச்சாறு
ஆகியன வகைக்கு 1 நாழி எடுத்துக்கொள்ளவும்.பிறகு
மிளகு
உளுந்து
கோட்டம்
முந்திரி
அதிமதுரம்,வகைக்கு 1 பலம்.
எடுத்து அரைத்து கற்கமாக எடுத்துக்கொண்டு முன்சொன்ன குடிநீர் சாறுகள்
நெய் ஆகியவற்றுடன் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வடித்து சாப்பிட்டு வர
வேண்டும்.
தீரும் நோய்கள்.
பித்தம்
வாயில் நீருரல்
தாதுநட்டம்
மேகம்
மூலக்கடுப்பு
வாந்தி
விக்கல்
ஈளை
சயம்
உடல்,கை,கால் எரிச்சல்
தலைநோய்கள்
விழிநோய்கள்
சொறி,சிரங்கு
சிலந்தி
தேமல்
நீர்க்கடுப்பு
ரத்தம் விழுதல்
ஆகியன தீரும்.
நரம்பு ஊரும்
எலும்புகள் வளரும்
உடல் வன்மை அடையும்.
2 . மகாவில்வாதி லேகியம்
வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன்
விலாமிச்சை
நிலவாகை
பாதிரி
நன்னாரி
பருவிளா
சிற்றாமல்லி
பேராமல்லி
சிறுவிளாவேர்
சிறுவாகை
முன்னை
முசுமுசுக்கை
கொடிவலி
தேற்றான் விரை
போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு
உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு
இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர்
சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து
பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு
சுக்கு
மிளகு
திப்பிலி
கடுக்காய்
நெல்லிக்காய்
தான்றிக்காய்
லவங்கம்
ஏலம்
கோஷ்டம்
அதிமதுரம்
கெந்தமாஞ்சில்
கருஞ்சீரகம்
வெண்சீரகம்
வாய்விலங்கம்
சகஸ்திரபேதி
தாளிசபத்திரி
செண்பகப்பூ
அக்கிரகாரம்
மல்லி
விளா
கார்போக அரிசி
தேக்கு
முந்திரி
பேரீச்சம்
வில்வம்
வாளுவையரிசி
சிறுநாகம்
நாகணம்
பருத்திவிரை
வேப்பன்விரை
இர்லுப்பைப்பூ.
போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி
தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக
கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு
தீரும் நோய்கள்.
சுவாசகாசம்
அரோசகம்
வீக்கம்
உடம்பு எரிவு
விஷப்பாண்டு
வயிற்றெரிச்சல்
உப்பசம்
கிராணி
எரிபாண்டு
கைகாலெரிவு
காந்தல்
வாந்தி
ஓக்காளம்
அன்னதோஷம்
சூலை
எட்டு வகையான சயங்கள்
அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
நாற்பது வகையான பித்தங்கள்
அஸ்திசுரம்
அதிசாரம் முதலியன தீரும்.
3 . குக்கிலாதி சூரணம்
திரிகடுகு 1/2 பலம்
(சுக்கு, மிளகு, திப்பிலி)
திரிபலை 1/2 பலம்
(கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)
சீரகம் 1/2 பலம்
பறங்கிப் பட்டை 2 பலம்
இவைகளை நன்கு இடித்துச் சூரணமாக்கி வைத்துக் கொள்ளவும்.
வெள்ளைக் குங்கிலியம் 5 பலத்தை எருக்கு இலைக்குள் வைத்து, பத்து
வறட்டியில் புடம் போட்டு எடுத்து வைத்துக் கொண்டு, பிறகு வேப்பம் பட்டைக்
குடிநீரில் துலாயந்திரமாகக் கட்டி சுத்தி செய்து, அதன் பிற எருமை
வெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வெள்ளைத் துணியில் தோய்த்துப் பிழிந்து
முன்சொன்ன சூரணத்துடன் இதையும் சூரணித்துக் கலந்து சாப்பிட வாதப்பிடிப்பு,
தெறிப்பு, குடைச்சல், கை கால் எரிவு முதலியன தீரும்.