வீட்டு வேலைகளை செய்வது, வாக்கிங் செல்வது மற்றும் சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதின் மூலம் பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம்.
? கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களுக்கும் ஏற்ற இறக்கமான மனநிலை இருக்கும். அதில் சில நேரங்களில் மிகவும் மன வேதனையை சந்திக்க நேரிடும். இதனை தினமும் வாக்கிங் செல்வதன் மூலம் சரிசெய்யலாம். எப்படியெனில் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம் மூளையில் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோர்பின்கள் வெளியிடப்படும்.
? பொதுவாக கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் வாக்கிங் மேற்கொள்வதால், இந்த மலச்சிக்கல் பிரச்சனை குறையும். எனவே தினமும் 15-20 நிமிடம் வாக்கிங் மேற்கொள்ளுங்கள்.
? கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகுந்த சோர்வையும், பலவீனத்தையும் பெண்கள் சந்திப்பார்கள். இக்காலத்தில் போதிய அளவில் ஓய்வை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் அளவுக்கு அதிகமாக ஓய்வு எடுப்பது நல்லதல்ல. எனவே சிறு தூரம் நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் சோர்வு தடுக்கப்பட்டு, உடல் ஆற்றலும் தக்க வைக்கப்படும்.
? பொதுவாக கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் தினமும் வாக்கிங் மேற்கொண்டால், இரத்த அழுத்தமானது சீரான அளவில் பராமரிக்கப்படும்.
? கர்ப்பிணிகள் தினமும் வாக்கிங் மேற்கொண்டால், இடுப்பு தசைகளின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, பிரசவம் சுமூகமாகவும், மிகுந்த வலியின்றியும் இருக்கும்.
? கர்ப்ப காலத்தில் பெண்களால் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது என்பது மிகவும் கடினம். ஆனால் தினமும் 30 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
? கர்ப்பிணிகள் தினமும் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம், தாயின் உடல் எடை சரியான அளவில் பராமரிக்கப்படுவதோடு, குழந்தையின் எடையும் கட்டுப்படுத்தப்படும். கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் இருந்தால், பிரசவத்தின் போது சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆகவே குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுக்க வேண்டுமானால், தினமும் வாக்கிங் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.