26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Beverages Ice Water
ஆரோக்கிய உணவு

உணவுக்கு பின் ஐஸ் தண்ணீர் அருந்தகூடாது

உணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா? உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

கொழுப்பு உறைந்து விடும்
இன்றைக்கு நம்மவர்களில் பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீர்தான். கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் நம்மவர்கள் உபயோகிப்பது ஜில் தண்ணீர்தான் தான். இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..!!

*இதயநோயாளிகள் பாதிப்பு*, மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
Beverages Ice Water

Related posts

உங்களுக்கு தெரியுமா தயிர் சாப்பிடுவதால் உடல் பருமனை குறைக்க முடியும்!

nathan

இந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உடல் சோர்வை நீக்ககி நரம்புகளின் வலிமையை உறுதியாக்க தினமும் இத சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்…

nathan

சப்பாத்தி ரோல்

nathan

தேனில் ஊறவைத்து வெங்காயத்தை சாப்பிட்டு வர என்ன நடக்கும் தெரியுமா..?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கடுகு எண்ணெயை அன்றாட சமையலில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

சத்து பானம்

nathan

மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan

நன்மை செய்யும் கொழுப்பு அதிகமுள்ள நிலக்கடலை

nathan