25.5 C
Chennai
Wednesday, Jan 28, 2026
06
Other News

மாணவி கொலை – தப்பி ஓடிய தாய்மாமன் கைது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை ஒட்டியுள்ள கே.பண்டாரப்பள்ளி பனன்ஹோப் அருந்ததியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா (வயது 18); இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜீவிதாவின் தாய் ஜெயப்பிரதாவின் தம்பி சரண்ராஜ் (35). திருப்பத்தூரை அடுத்த சின்னகாசிநாயக்கன்பட்டி வட்டத்தைச் சேர்ந்த இவர், புகைப்படக் கலைஞராகவும், நாட்றம்பள்ளி வட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராகவும் பணியாற்றி வருகிறார்.

மாணவிகள் ஜீவிதாவும், சரண்ராஜும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரண்ராஜ் கொலைவழக்கில் ஈடுபட்டது தெரியவருவதால் மாணவியின் தாய் ஜெயப்பிரதா ஜீவிதாவுக்கும், சரண்ராஜுக்கும் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதனால்தான் சரண்ராஜ் கடந்த ஒரு வாரமாக ஜீவிதாவை பின்தொடர்ந்துள்ளார். ஆனால், அவருடன் பேசுவதை ஜீவிதா தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ், நேற்று வீட்டில் தனியாக இருந்த ஜீவிதாவை, வாயை துணியால் மூடி, கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றார். பின்னர் அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதி வைத்திருந்த செல்போனை திருடிவிட்டு தப்பியோடினார்.

இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர், நாட்டாறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, வாணியம்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் பழனி (பொறுப்பு) மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, ஜீவிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்ராஜை தேடி வந்த நிலையில், நிலக்கல் நத்தம் பகுதியில் பதுங்கியிருந்த சரண்ராஜை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். சரண்ராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கேரள தடகள வீராங்கனை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 20 பேர் கைது

nathan

ஆண்களுடன் ஒரே அறையை பகிர்ந்து கொண்டேன்..

nathan

உற்பத்தித் தொழிலில் ரூ.4 கோடி வருவாய் ஈட்டும் தமிழ் இனியன்!

nathan

அபிஷேக் பச்சனின் தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு

nathan

விபச்சார வழக்கால் சீரழிந்த வாழ்க்கை! புவனேஸ்வரி கூறிய அதிர்ச்சி தகவல்!

nathan

நடிகர் டெல்லி கணேஷ் 80வது பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

மீண்டும் தன் மகனிடம் அடைக்கலம் ஆன பப்லு…!கைவிட்டு சென்ற காதல்…

nathan

மிக சக்திவாய்ந்த சூரிய புயல்

nathan

கலெக்டர் ஆகும் முதல் கேரள ஆதிவாசிப் பெண் ஐஏஎஸ்!

nathan